பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் ஆய்வக கட்டுமானம்: பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

Added : நவ 23, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் அரசுப்பள்ளியில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதிய ஆய்வகம் கட்டப்படுகிறது.உடுமலை கல்வி மாவட்ட அரசுப்பள்ளிகளில், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மாணவர்களின் கல்வி கற்பிக்கும் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.அதன்படி, பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், குடிநீர்
 அரசு பள்ளியில் ஆய்வக கட்டுமானம்: பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

உடுமலை:உடுமலை பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் அரசுப்பள்ளியில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதிய ஆய்வகம் கட்டப்படுகிறது.உடுமலை கல்வி மாவட்ட அரசுப்பள்ளிகளில், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மாணவர்களின் கல்வி கற்பிக்கும் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, நுாலகம், கம்ப்யூட்டர் அறை, அறிவியல் ஆய்வகம், கழிப்பறை கட்டுதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.குறிப்பாக, ஒவ்வொரு பள்ளிகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக இரு ஆய்வகங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளியில், 980 மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இதனால், மாணவியர் நலன் கருதி, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தித்தரப்படுகின்றன.தற்போது, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், 35 லட்சம் ரூபாய் மதிப்பில் இரு ஆய்வகங்கள் கட்டப்படுகின்றன. விரைந்து பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X