பொது செய்தி

தமிழ்நாடு

ரசாயன பூச்சிக்கொல்லி வேண்டவே வேண்டாம்! நுண்ணுயிரிகள் பயன்படுத்த அறிவுரை

Added : நவ 23, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பக்க விளைவுகள் அதிகமுள்ள ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக, நுண்ணுயிரிகளை கொண்டு பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து வேளாண் துறை தெரிவித்துள்ளது.பூச்சிகளை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லிகளை, விவசாயிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்துகின்றனர். பூச்சிக்கொல்லிகளை தொடர்ந்து பயன்படுத்துவதால், பூச்சிகளுக்கு எதிர்ப்புத் தன்மை

பொள்ளாச்சி;பக்க விளைவுகள் அதிகமுள்ள ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக, நுண்ணுயிரிகளை கொண்டு பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து வேளாண் துறை தெரிவித்துள்ளது.பூச்சிகளை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லிகளை, விவசாயிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்துகின்றனர். பூச்சிக்கொல்லிகளை தொடர்ந்து பயன்படுத்துவதால், பூச்சிகளுக்கு எதிர்ப்புத் தன்மை உருவாகிறது. சுற்றுசூழல் சீர்கேடு, விளைபொருட்களில் பூச்சிக்கொல்லிகளின் படிவு தங்குதல் போன்ற விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, விவசாயிகள் பூச்சிகளை தவிர்த்து, மாற்று வழிகளை கடைபிடிக்க வேண்டும். ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக, நுண்ணுயிர்களை கொண்டு பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி கூறிய தாவது:பயிர்களை தாக்கும் வண்டு இனங்களை, அவற்றின் புழு பருவத்திலேலேய அழிக்க, 'மெட்டாரைசியம் அனிசோபிலியே' பூஞ்சாணம் பயன்படுகிறது. சாறு உறிஞ்சும் பூச்சிகள், மெல்லிய தோல் கொண்ட பூச்சிகளை கட்டுப்படுத்த, 'வெர்ட்டிசீலியம் லெக்கானி' நுண்ணுயிரி பயன்படுகிறது.தடித்த தோல் கொண்ட இலைப்புழு, காய்ப்புழு போன்ற பூச்சிகளை கட்டுப்படுத்த, 'பெவேரியா பேசியானா' பயன்படுகிறது.பயன்படுத்தும் முறைமெட்டாரைசியம் அனிசோபிலியே, வண்டுகளை அழிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. இது, தண்டுத்துளைப்பான், வைர முதுகுப்பூச்சி, காண்டாமிருக வண்டு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.மாட்டுப்பண்ணை, கோழிப்பண்ணைகளில் உள்ள ஈக்களைக் கட்டுப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம். வேர்ப் பூச்சிகள், தத்துப்பூச்சிகள், கருவண்டு, வெள்ளை ஈக்கள், கொடி வகைப் பயிர்களைத் தாக்கும் வண்டுகளையும் கட்டுப்படுத்தும்.எருக்குழிகளில் இருந்து காண்டாமிருக வண்டு வளர்கிறது. எருக்குழியில் கடப்பாறையால் குழியெடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில், 5 கிராம் என்ற அளவில் இந்த பூஞ்சாணத்தை கலந்து ஊற்ற வேண்டும்.இந்தப் பூஞ்சாணம், தானியங்கள், பயறுவகைப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள், பழப்பயிர்கள், பருத்தி போன்றவற்றைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. இதை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் எடுத்துக்கொண்டு, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.மண்ணில் இடுவதாக இருந்தால், ஏக்கருக்கு ஒரு கிலோ மெட்டாரைசியம் பூஞ்சாணத்துடன், 50 கிலோ தொழுவுரம் கலந்து துாவலாம். மாதம் ஒருமுறை இந்தப் பூஞ்சானத்தைத் தெளித்தால், பெரும்பாலான பூச்சிகள், வண்டுகள் பாதிப்பிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கலாம்.வெர்ட்டிசீலியம் லெக்கானி பூஞ்சானம் வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, செதில்பூச்சி, தத்துப் பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. காய்கறிகள், பூக்கள், பப்பாளி போன்ற பயிர்களில் இதைப் பயன்படுத்தலாம்.ஏக்கருக்கு ஒரு கிலோ வெர்ட்டிசீலியம் பூஞ்சானத்தை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். சொட்டுநீர்ப் பாசனத்தில், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 5 கிராம் என்ற அளவில் கலந்து கொடுக்கலாம்.பெவேரியா பேசியானா நுண்ணுயிரி, நாற்றாங்காலில் தோன்றக்கூடிய இலைசுருட்டு புழுவின் தாக்குதலை குறைக்க உதவுகிறது. ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 2 கிராம் பெவேரியா பேசியானா நுண்ணுயிரையை கலந்து, காலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிப்பதால் புழுக்களின் மீது நோய் உருவாகி புழுக்கள் அழியும்.இது குறித்த மேலும் விபரங்களுக்கு, தங்கள் பகுதி வேளாண் துறையை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X