பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Added : நவ 23, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.தமிழக அரசின் உத்தரவுப்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடக்கிறது. உரிய சமூக இடைவெளி பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முகக்கவசம் அணிதல், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்
 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.தமிழக அரசின் உத்தரவுப்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடக்கிறது. உரிய சமூக இடைவெளி பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முகக்கவசம் அணிதல், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.இந்நிலையில், மாணவர்களுக்கு தொற்று உள்ளதா என கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதில், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, 36 பள்ளிகளில், இரண்டு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தினமும் நான்கு பள்ளிகள் வீதம் பரிசோதனை செய்யப்படுகிறது.பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று மாணவியருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ஆசிரியர்களுக்கு ஏதாவது அறிகுறி உள்ளதா என, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.நகரத்தில் தினமும், 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X