அங்கலக்குறிச்சி மின் கோட்டத்தில் அறிவிப்பின்றி மின்வெட்டால் அவதி

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஆனைமலை:அங்கலக்குறிச்சி மின் வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், முன் அறிவிப்பில்லாமல் பல மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவது குறித்து, முதல்வருக்கு மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், சமத்துார் பேரூராட்சி பகுதிகள் மற்றும் ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட, 19 ஊராட்சிகளில், 2.4 லட்சம் மக்கள் உள்ளனர். வங்கிகள், சிறு, குறு தொழில்

ஆனைமலை:அங்கலக்குறிச்சி மின் வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், முன் அறிவிப்பில்லாமல் பல மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவது குறித்து, முதல்வருக்கு மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், சமத்துார் பேரூராட்சி பகுதிகள் மற்றும் ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட, 19 ஊராட்சிகளில், 2.4 லட்சம் மக்கள் உள்ளனர். வங்கிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன.இந்நிலையில், ஆனைமலை, கோட்டூர், சோமந்துறைசித்துார், நா.மூ.சுங்கம்., சமத்துார் சுற்றுப்பகுதிகளில் கடந்த, இரண்டு மாதங்களாக தினமும் குறைந்தபட்சம், 15 முறையாவது மின் வெட்டு ஏற்படுகிறது.ஒவ்வொரு முறை மின் வெட்டு செய்யும் போதும், 15 முதல், 30 நிமிடங்கள் மின் வினியோகம் தடைபடுகிறது. மக்கள் கேள்வி எழுப்பினால், மின்வாரிய அதிகாரிகள் முறையாக தகவல் தெரிவிக்காமல் அலட்சியமாக உள்ளனர்.இதையடுத்து, அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்னையை சரிசெய்ய வலியுறுத்தி, மக்கள் சபை நிகழ்ச்சி மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு, மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.மனுவில் கூறியிருப்பதாவது:அங்கலக்குறிச்சி மின்வாரிய கோட்டத்தில், பல மணி நேரங்கள் அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு, அனைத்து தரப்பினரும் பாதிக்கின்றனர். மின்தடை அறிவிக்கப்படும் போதும், அறிவிக்கப்பட்ட நேரத்தை விட பல மணி நேரங்கள் கடந்தே மின் வினியோகம் செய்யப்படுகிறது.இதனால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், 'ஆன்லைன்' வகுப்பில் படிக்கும் மாணவர்கள், கொரோனா பாதிப்பால் வீட்டிலிருந்து 'ஆன்லைன்' வாயிலாக பணியாற்றுவோர், பொதுமக்கள் பாதிக்கின்றனர்.மேலும், கூட்டுக்குடிநீர் திட்டங்களில் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வது பாதிக்கிறது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதை தவிர்க்க, மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X