பொது செய்தி

தமிழ்நாடு

பக்தர்கள் வழிபாட்டுக்காக கோவில் திறக்க கோரிக்கை

Added : நவ 23, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:சோமவாரத்திருவிழா முன்னிட்டு, விரதமிருக்கும் பக்தர் வழிபாட்டுக்காக, நல்லட்டிபாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் திறக்க வேண்டும் என, ஹிந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.கோவை கோட்ட ஹிந்து முன்னணி செயலாளர் அசோக்குமார், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கிணத்துக்கடவு தாலுகா, நல்லட்டிபாளையத்தில் நஞ்சுண்டேஸ்வரர் கோவில்

கிணத்துக்கடவு:சோமவாரத்திருவிழா முன்னிட்டு, விரதமிருக்கும் பக்தர் வழிபாட்டுக்காக, நல்லட்டிபாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் திறக்க வேண்டும் என, ஹிந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.கோவை கோட்ட ஹிந்து முன்னணி செயலாளர் அசோக்குமார், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கிணத்துக்கடவு தாலுகா, நல்லட்டிபாளையத்தில் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை மாத கடைசி திங்கள்கிழமையில், சோமவாரத்திருவிழா நடக்கிறது.கடந்த, 10 ஆண்டுகளாக, கோவிலில் சோமவார திருவிழா நடப்பதில்லை. ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் கோவில், திருவிழா நடக்கும் சோமவாரதத்தின் கடைசி மூன்று நாட்கள் மட்டும் பூட்டப்படுகிறது. பக்தர்கள் மற்றும் ஹிந்து முன்னணி சார்பில் கோவில் நிர்வாகத்திடம் முறையிட்டபோது, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், திருவிழா நடத்துவதில்லை என தெரிவிக்கின்றனர்.பக்தர்களின் வழிபாட்டு உரிமையை முடக்கக்கூடாது. எனவே, வழிபாட்டு உரிமையை மாவட்ட நிர்வாகம் சட்டப்படி மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பு ஆண்டில் சோமவாரத்திருவிழா நடக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X