பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு மையங்களில் வாக்காளர் சேர்க்க முகாம் :இரு தொகுதிகளில் 6,392 விண்ணப்பங்கள்

Added : நவ 23, 2021
Share
Advertisement
உடுமலை;உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கான, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள நடந்த, 4 சிறப்பு முகாம்களில், 6,392 மனுக்கள் பெறப்பட்டன.தேர்தல் கமிஷன், 2022 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்க திருத்தம் கொள்ள, கடந்த, 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரும், 30ம் தேதி வரை, விண்ணப்பிக்க அவகாசம்

உடுமலை;உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கான, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள நடந்த, 4 சிறப்பு முகாம்களில், 6,392 மனுக்கள் பெறப்பட்டன.தேர்தல் கமிஷன், 2022 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்க திருத்தம் கொள்ள, கடந்த, 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரும், 30ம் தேதி வரை, விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ள, கடந்த, 13, 14 மற்றும் 20, 21ம் தேதிகளில், ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது.உடுமலை தொகுதியில், 294 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள, 125 மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது.நான்கு முகாம்களிலும், 2,712 பேர் புதிய வாக்காளர்களாக இணைய விண்ணப்பித்துள்ளனர். 513 நீக்கல் விண்ணப்பங்களும், முகவரி மாற்றம்,போட்டோ மாற்றம் உள்ளிட்ட திருத்தம் மேற்கொள்ள, 410 விண்ணப்பங்களும், ஒரே தொகுதியில் முகவரி மாற்றம் செய்ய, 267 விண்ணப்பங்கள் என, 3,902 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.மடத்துக்குளம் தொகுதியிலுள்ள, 287 ஓட்டுச்சாவடிகளுக்கு, 117 மையங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன. இம்முகாம்களில், 1,818 பேர் புதிய வாக்காளர்களாக இணையவும், நீக்கம் செய்ய, 258, திருத்தம் மேற்கொள்ள, 308, ஒரே தொகுதியில் முகவரி மாற்றத்திற்கு, 106 விண்ணப்பங்கள் என, 2,490 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'வாக்காளர் பட்டியல் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள, 30ம் தேதி வரை, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். வரும், 27,28 ம் தேதி, ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கும் சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பிக்கலாம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X