டில்லி: அடுத்த ஆண்டு ஜன., 26ம் தேதி கொண்டாப்படவுள்ள இந்திய குடியரசு தினத்துக்கு மியான்மர் ராணுவ அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டதாக பரவிய வதந்திக்கு இந்திய தூதர் விளக்கம் அளித்துள்ளார்.
பல்தொழில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா தன்னார்வ கூட்டமைப்பு (பிஎம்எஸ்டிசி) என்கிற அமைப்பில் இந்தியா, பூடான், வங்கதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
தெற்காசிய நாடுகளில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும் இந்த கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இதற்கான முக்கிய கூட்டங்கள் அவ்வபோது நடைபெறுவதுண்டு.
இந்த கூட்டங்களில் இந்தியா சார்பாக அதிகாரிகள் சிலர் கலந்துகொள்வது வழக்கம். இந்த கூட்டமைப்பில் மியான்மரும் அங்கம் வகிக்கிறது. சமீபத்தில் மியான்மர் நாட்டில் நடந்த ராணுவ வன்முறை வெறியாட்டம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து கடந்த சில மாதங்களாக கலவர பூமியாக திகழும் மியான்மரில் அன்றாடம் வன்முறை வெறியாட்டங்கள் நடந்து வருகின்றன. முக்கிய தலைவர்கள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆசிய நாடுகள் அனைத்தும் மியான்மர் ராணுவ அதிகாரிகளை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் மியான்மர் ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடப் படவுள்ளது.
குடியரசு தினத்தன்று டிஎம்எஸ்டிஇசி நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் இந்தியாவுக்கு அழைக்கப்படுவர் என்கிற ஒரு வதந்தி ஊடகங்களில் பரவியது. இதனால் மியான்மர் நாட்டின் முக்கிய இராணுவ அதிகாரிகளும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவில் பங்கேற்பார் என கூறப்பட்டது.
இது சர்ச்சைக்குள்ளானது. தற்போது இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பட்ஜி விளக்கம் அளித்துள்ளார். மியான்மர் நாட்டில் இருந்து எந்த அதிகாரியும் இந்திய குடியரசு தினத்துக்கு அழைக்கப்படவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE