போலீஸ் செய்திகள்: பணம் திருடிய இருவர் கைது

Added : நவ 23, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தை சேர்ந்த, மர வேலை செய்பவர் தர்மராஜ்,36. இவருடன், விருதுநகர் ராஜபாளையத்தை சேர்ந்த ராஜ்,33, கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்,29, ஆகியோர் பணியாற்றினர்.கடந்த, 19ம் தேதி இடம் வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடகு வைத்து, 3.3 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். பணத்துடன், பல்லடம் ரோடு வெங்கட்ராமபுரம் வீதியில், ஒருவர் வீட்டுக்கு பணிக்கு

பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தை சேர்ந்த, மர வேலை செய்பவர் தர்மராஜ்,36. இவருடன், விருதுநகர் ராஜபாளையத்தை சேர்ந்த ராஜ்,33, கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்,29, ஆகியோர் பணியாற்றினர்.கடந்த, 19ம் தேதி இடம் வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடகு வைத்து, 3.3 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். பணத்துடன், பல்லடம் ரோடு வெங்கட்ராமபுரம் வீதியில், ஒருவர் வீட்டுக்கு பணிக்கு சென்றார்.
அப்போது, அவருடன் பணியாற்றிய இரண்டு பேரும், பணத்தை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆனார்கள். இதுகுறித்து, கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில், தர்மராஜ் புகார் கொடுத்தார். கிழக்கு போலீஸ் எஸ்.ஐ., திருமலைசாமி மற்றும் போலீசார், நேற்றுமுன்தினம் தங்கம் தியேட்டர் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக நடந்து வந்த மணிகண்டன் மற்றும் சி.டி.சி., மேடு அருகே ராஜூ ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 3.3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.புகையிலை பொருட்கள் பறிமுதல்பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில், மேற்கு எஸ்.ஐ., முரளி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, ஒரு கடை முன், அட்டைப்பெட்டியுடன் நின்ற நபரை பிடித்து விசாரித்தனர்.பொள்ளாச்சி குமரன்நகரை சேர்ந்த சுடலைமணி,32, என்பதும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து இரண்டு கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பள்ளி மாணவன் தற்கொலை

பொள்ளாச்சி குமரன் நகர், பாரத் நகரை சேர்ந்த கலாசு தொழிலாளி சரவணன் மகன் சஞ்சீவ், 14. இவர், பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வீட்டில் இருந்த சிறுவன், தந்தையின் மொபைல்போனில் கேம் விளையாடியுள்ளார். வேலைக்கு சென்ற தந்தை மொபைல்போனை எடுத்துச் சென்றுள்ளார்.இதனால், விரக்தியடைந்த சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
முகாமில் வாலிபர் தற்கொலை
கோட்டூர் குமரன்கட்டம் பகுதியிலுள்ள, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த அஜித்குமார், 23; கூலித்தொழிலாளி. இவர் அதேபகுதியிலுள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில், அப்பெண் ராமேஸ்வரம் சென்றதால், இரண்டு மாதங்களாக அவருடன் பேச முடியாத மனவிரக்தியில், கடந்த, 19ம் தேதி விஷம் குடித்தார். பெற்றோர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X