பொது செய்தி

தமிழ்நாடு

ஓடும் பஸ்சில் காதல் ஜோடிக்கு வெட்டு

Added : நவ 23, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ஓடும் பஸ்சில் காதல் ஜோடியை வாளால் வெட்டிவிட்டு தப்பிய இருவரை போலீசார் தேடுகின்றனர்.தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் ஜஸ்டின். இவரது மகன் வினித் 22. இவரும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மகள் பில்கேஸ் 22, என்பவரும் காதலித்து வந்தனர். காதலுக்கு சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்த நிலையில், வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் நடத்த இருந்த நிலையில், நவ.20ல் பில்கேஸ்

ராமநாதபுரம் : ஓடும் பஸ்சில் காதல் ஜோடியை வாளால் வெட்டிவிட்டு தப்பிய இருவரை போலீசார் தேடுகின்றனர்.

தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் ஜஸ்டின். இவரது மகன் வினித் 22. இவரும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மகள் பில்கேஸ் 22, என்பவரும் காதலித்து வந்தனர். காதலுக்கு சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்த நிலையில், வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் நடத்த இருந்த நிலையில், நவ.20ல் பில்கேஸ் வீட்டை விட்டு வெளியேறி காதலன் வினித்துடன் கோவை சென்றார்.நேற்று காலை ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் பாதுகாப்பு கேட்டு சரணடைந்தனர்.

போலீசார் இருவருக்கும் திருமணம் செய்த நிலையில், இரு தரப்பு பெற்றோரை அழைத்து சமாதானம் பேசினர். இதையடுத்து வினித், பில்கேஸ், வினித் தந்தை ஜஸ்டின் 57, தாய் குளோரியா 52, ஆகியோர்ஊர் செல்ல பஸ்சில் சென்றனர். மண்டபம் பஸ் ஸ்டாண்டில் இருந்து மதியம் 1:00 மணிக்கு பஸ் புறப்பட்ட போது பஸ்சில்ஏறிய பெண்ணின் உறவினர்கள் வாள் மற்றும் பிளேடால் காதல் ஜோடியையும், தடுத்த ஜஸ்டின், குளோரியா ஆகியோரை வெட்டினர்.
இவ்வழக்கில் பில்கேட்டின் சகோதரர் ஆண்டனி 20, உறவினர் யாகப்பா 27, ஆகியோரை மண்டபம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X