மதுரை : சாப்டூர் குருநாதன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:சாப்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள், 108 ஆம்புலன்ஸ், அடிப்படை வசதிகள் இல்லை. அவசர சிகிச்சைக்கு நோயாளிகள் உசிலம்பட்டிக்கு 30 கி.மீ., துாரம் வாகனங்களில் செல்கின்றனர்.
மலையடிவார கிராமம் என்பதால் பூச்சிகளின் தாக்குதலுக்கு மக்கள் ஆளாகின்றனர். அதற்குரிய மருந்து மருத்துவமனையில் இல்லை. சாப்டூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். டாக்டர், நர்ஸ்களை நியமித்து, ஆம்புலன்ஸ் உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு: மனுதாரர் 2020ல் கலெக்டருக்கு மனு அளித்துள்ளார். அதன் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். கலெக்டர், ஊரக சுகாதார பணி இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி 2 வாரங்கள் ஒத்திவைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE