பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு முறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஆடு திருடர்களை பிடிக்கச்சென்ற திருச்சி எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் 55, நேற்றுமுன்தினம் அதிகாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து மாநில அளவில் போலீசார் ரோந்து செல்லும்போது பாதுகாப்பு முறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.நகரில் போலீசார் தனியாக ரோந்து செல்லக்கூடாது. உடன் ஒருவருடன் கைத்துப்பாக்கியுடன் செல்ல வேண்டும் என சில மாதங்களுக்கு முன் கமிஷனர் பிரேம் ஆனந்த்


ஆடு திருடர்களை பிடிக்கச்சென்ற திருச்சி எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் 55, நேற்றுமுன்தினம் அதிகாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து மாநில அளவில் போலீசார் ரோந்து செல்லும்போது பாதுகாப்பு முறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.நகரில் போலீசார் தனியாக ரோந்து செல்லக்கூடாது. உடன் ஒருவருடன் கைத்துப்பாக்கியுடன் செல்ல வேண்டும் என சில மாதங்களுக்கு முன் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டிருந்தார். நடக்கும் சம்பவங்களை பதிவு செய்ய 'பாடி கேமரா'வுடன் போலீசார் ரோந்து வருகின்றனர்

செக்கானுாரணி ஏட்டு ஒருவர் விசாரிக்க சென்றபோது தாக்கப்பட்டார். இதையடுத்து மாவட்டத்திலும் போலீசார் தனி ஆளாக விசாரிக்க செல்லக்கூடாது என எஸ்.பி., பாஸ்கரன் அறிவுறுத்தியிருந்தார்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரோந்து செல்லும் போதும், செக்போஸ்ட்டில் இருக்கும் போதும் போலீசார் தனி ஆளாக இருக்கக்கூடாது என்ற உத்தரவை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரவு ரோந்து உதவிகமிஷனர்கள் இதை உறுதி செய்ய வேண்டும். அசம்பாவிதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனர் பொறுப்பேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.மதுரை, நவ.23 -திருச்சி எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் கொலையை தொடர்ந்து மதுரை நகரில் போலீசார் தனியாக ரோந்து செல்லக்கூடாது. செக்போஸ்ட்டில் தனி ஆளாக இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X