பொது செய்தி

தமிழ்நாடு

யூரியாவுடன் உரங்கள் வாங்க வலியுறுத்தல்; விவசாயிகள் குற்றச்சாட்டு

Added : நவ 23, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் யூரியா, உரத்திற்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் தனியார் உர நிறுவனங்கள் பூச்சிக்கொல்லி, இதர பொருட்கள் வாங்கினால் மட்டுமே யூரியா, உரமூடை தருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.நெல்நாற்றுகளை நட்ட 15, 30 மற்றும் 45 ம் நாட்களில் மேலுரமாக யூரியா பயன்படுத்தினால் நெல் துார் கட்டி கதிர் பிடிக்கும் என்பதால் விவசாயிகளுக்கு யூரியா தேவையாக உள்ளது.


மதுரை : மதுரை மாவட்டத்தில் யூரியா, உரத்திற்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் தனியார் உர நிறுவனங்கள் பூச்சிக்கொல்லி, இதர பொருட்கள் வாங்கினால் மட்டுமே யூரியா, உரமூடை தருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெல்நாற்றுகளை நட்ட 15, 30 மற்றும் 45 ம் நாட்களில் மேலுரமாக யூரியா பயன்படுத்தினால் நெல் துார் கட்டி கதிர் பிடிக்கும் என்பதால் விவசாயிகளுக்கு யூரியா தேவையாக உள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர நிறுவனங்களில் யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் விற்கப்படுகின்றன. இந்தாண்டு யூரியா தட்டுப்பாடு அதிகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்

.அவர்கள் கூறியதாவது: மத்திய அரசின் மானிய விலையில் 45 கிலோ யூரியா மூடை ரூ.256க்கு விற்கப்படுகிறது. சில நேரங்களில் தனியார் நிறுவனங்கள் யூரியாவை கூடுதல் விலைக்கு விற்கின்றன. யூரியாவுக்கு தேவை அதிகமாக இருப்பதால் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி இதர உரங்கள் என குறைந்தது ரூ.500க்கு மேல் வாங்கினால் தான் யூரியா மூடை விற்பனை செய்கின்றனர்.

உர நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் யூரியாவை கூட்டுறவு சொசைட்டிகள் மூலம் விற்பனை செய்தால் இந்த பிரச்னை வராது என்றனர்.வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது: தனியார் நிறுவனங்களிடமும் உரம் விற்க வேண்டும் என்பதால் நேற்று ரயிலில் வந்த 700 மெட்ரிக் டன் யூரியாவை சொசைட்டி, தனியார் நிறுவனங்களுக்கு 50 சதவீதமாக பிரித்து வழங்கப்பட்டது. அடுத்து வரும் 200 மெட்ரிக் டன் யூரியாவை சொசைட்டிகளுக்கு வழங்கப்படும். மற்ற உரங்களை வாங்க கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள் குறித்து அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்தால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X