பொது செய்தி

தமிழ்நாடு

கோவை, திருப்பூர் மாநகர வளர்ச்சி குழுமம் உருவாக்கம்

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021
Share
Advertisement
சென்னை :கோவை, திருப்பூர் நகரங்களுக்கு தனித்தனி வளர்ச்சி குழுமங்களை உருவாக்கி, தமிழக அரசு உத்ரவிட்டுள்ளது. வீட்டுவசதி துறை செயலர், இக்குழுமங்களுக்கு தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.'தமிழகத்தில் மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் நகர்ப்புற வளர்ச்சி குழுமம் ஏற்படுத்தப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,
கோவை, திருப்பூர் மாநகர வளர்ச்சி குழுமம் உருவாக்கம்

சென்னை :கோவை, திருப்பூர் நகரங்களுக்கு தனித்தனி வளர்ச்சி குழுமங்களை உருவாக்கி, தமிழக அரசு உத்ரவிட்டுள்ளது. வீட்டுவசதி துறை செயலர், இக்குழுமங்களுக்கு தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'தமிழகத்தில் மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் நகர்ப்புற வளர்ச்சி குழுமம் ஏற்படுத்தப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., போன்று, இதற்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் தலைவராக இருப்பதா அல்லது ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தலைவராக நியமிப்பதா என்பதில் குழப்பம் ஏற்பட்டது.


latest tamil news




இது குறித்த செய்தி, நமது நாளிதழில் நேற்று வெளியானது. இதன் எதிரொலியாக, கோவை, திருப்பூர் நகர வளர்ச்சி குழுமங்களை ஏற்படுத்துவதற்கான அரசாணையை, வீட்டுவசதி துறை நேற்று பிறப்பித்தது.


கோவை



கடந்த 1994ல் உருவாக்கப்பட்ட முழுமை திட்டப்படி, கோவை திட்ட பகுதி 1,276 சதுர கி.மீ.,யாக உள்ளது. இதில் கோவை மாநகராட்சியுடன், 25 பேரூராட்சிகள், 71 வருவாய் கிராமங்களை சேர்த்து திட்ட பகுதி பரப்பளவு, 1,532 சதுர கி.மீ., ஆக நிர்ணயிக்கப்படுகிறது.

நகர் - ஊரமைப்பு சட்டத்தின் அடிப்படையில் கோவை நகர வளர்ச்சி குழுமம் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்படுகிறது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் முதன்மை செயலர், இதன் தலைவராக இருப்பார்.கோவை கலெக்டர் துணை தலைவராகவும், நிதி, போக்குவரத்து, தொழில்கள், பொதுப்பணித் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சி துறை ஆகியவற்றின் உயரதிகாரிகள், இதன் உறுப்பினர்களாக இருப்பர்.


நகர் - ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., இயக்குனர், கோவை மாநகராட்சி கமிஷனர், வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பர். வீட்டுவசதி, தொழில் துறை சார்ந்த தலா இரண்டு பேர், நகரமைப்பு கல்வி சார்ந்த ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்படுவார். முழுநேர உறுப்பினர் செயலர், அரசால் நியமிக்கப்படுவார்.


திருப்பூர்



கடந்த 2006ல் உருவாக்கப்பட்ட முழுமை திட்டப்படி, 220 சதுர கி.மீ., திருப்பூர் திட்ட பகுதியின் பரப்பளவாக உள்ளது. திருப்பூர் மாநகராட்சியுடன், நான்கு பேரூராட்சிகள், 31 வருவாய் கிராமங்கள் சேர்க்கப்பட்டு, 617 சதுர கி.மீ.,யாக பரப்பளவு நிர்ணயிக்கப்படுகிறது.
நகர் - ஊரமைப்பு சட்டப்படி, திருப்பூர் நகர வளர்ச்சி குழுமம் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்படுகிறது. இதன் தலைவராக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலர் இருப்பார்.

திருப்பூர் கலெக்டர் துணை தலைவராக இருப்பார். திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் மற்றும் அரசின் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பர். முழுநேர உறுப்பினர் செயலர் தனியாக நியமிக்கப்படுவார்.

இந்த இரண்டு நகர வளர்ச்சி குழுமங்களுக்கும் பிரதான நிர்வாக அமைப்புடன், ஆலோசனை குழுவும் தனியாக அமைக்கப்படுகிறது. இத்துடன் திட்டமிடல் குழுவும் தனியாக ஏற்படுத்தப்படுகிறது. இதற்கான நிர்வாக ரீதியான நடைமுறைகளை, நகர் - ஊரமைப்பு துறை இயக்குனர் மேற்கொள்வார் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X