பொது செய்தி

தமிழ்நாடு

போஸ்டர் கலாசாரத்தையும் ஒழிப்பாரா முதல்வர் ஸ்டாலின்?

Added : நவ 23, 2021
Share
Advertisement
கோவை:தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், பிளக்ஸ் பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தன்னை வரவேற்று, எந்த ஒரு பகுதியிலும் பிளக்ஸ் பேனர் வைக்கக் கூடாது.; அதை மீறி வைத்தால், கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததை தொடர்ந்து, அப்பழக்கத்தை தி.மு.க.,வினர் கைவிட்டனர்.இப்போது, அதற்கு மாறாக, போஸ்டர் கலாசாரத்தை பின்பற்றத் துவங்கியிருக்கின்றனர்.
 போஸ்டர் கலாசாரத்தையும் ஒழிப்பாரா முதல்வர் ஸ்டாலின்?

கோவை:தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், பிளக்ஸ் பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தன்னை வரவேற்று, எந்த ஒரு பகுதியிலும் பிளக்ஸ் பேனர் வைக்கக் கூடாது.; அதை மீறி வைத்தால், கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததை தொடர்ந்து, அப்பழக்கத்தை தி.மு.க.,வினர் கைவிட்டனர்.இப்போது, அதற்கு மாறாக, போஸ்டர் கலாசாரத்தை பின்பற்றத் துவங்கியிருக்கின்றனர். நகரெங்கும் புதிதாக கட்டப்படும் பாலங்கள், அரசு சுவர்கள், பள்ளி கட்டட சுவர்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் சுவர்களில், மெகா சைஸ் போஸ்டர்களை ஒட்டி, நகரையே அசிங்கப்படுத்தி வருகின்றனர். இப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.முதல்வர் வந்தாலும் ஒட்டுகின்றனர்; அமைச்சர்கள் வந்தாலும் ஒட்டுகின்றனர். தங்களை பிரகடனப்படுத்தி, விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கோடு, போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.சென்னை மாநகராட்சி பகுதியில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்கப்பட்டு, ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்தவை கிழிக்கப்பட்டு உள்ளன.அதேபோல், கோவையிலும் அப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட வேண்டுமென, கோவை மக்கள் விரும்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X