தங்க கற்கள் எடுப்போர் மீது நடவடிக்கை : அறிவிப்பு வைத்து வனத்துறை எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தங்க கற்கள் எடுப்போர் மீது நடவடிக்கை : அறிவிப்பு வைத்து வனத்துறை எச்சரிக்கை

Added : நவ 23, 2021
Share
கூடலுார்:'கூடலுார், தேவாலா, பொன்னுார் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து தங்க தாது கற்கள் எடுப்போர் மீது வன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவாலா, பொன்வயல் பகுதிகளில், ஆங்கிலேயர் காலத்தில் சுரங்கம் அமைத்து, தங்கம் சேகரிக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பின், இப்பகுதி வனத்துறை கட்டுபாட்டுக்கு கொண்டு
 தங்க கற்கள் எடுப்போர் மீது நடவடிக்கை : அறிவிப்பு வைத்து வனத்துறை எச்சரிக்கை

கூடலுார்:'கூடலுார், தேவாலா, பொன்னுார் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து தங்க தாது கற்கள் எடுப்போர் மீது வன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவாலா, பொன்வயல் பகுதிகளில், ஆங்கிலேயர் காலத்தில் சுரங்கம் அமைத்து, தங்கம் சேகரிக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பின், இப்பகுதி வனத்துறை கட்டுபாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. எனினும், உள்ளூர் மக்கள் சிலர், புதிய சுரங்கம் அமைத்து, தங்க தாது கற்களை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், அப்பகுதிக்குள் மக்கள் செல்வதற்கும், தங்க தாது கற்கள் எடுபதற்கும் தடை விதித்து, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அவ்வப்போது, ட்ரோன் கேமரா பயன்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், வனச்சரகர் ராம்குமார் தலைமையில் வன ஊழியர்கள் கைதகொல்லி, பொன்வயல், கீழ்நாடுகாணி, பொனனுார் ஆகிய இடங்களில், இது தொடர்பான எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில்,'தடை செய்யப்பட்டுள்ள பகுதிக்குள், அத்து மீறி நுழைபவர்கள் மீது வனச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X