பொது செய்தி

தமிழ்நாடு

சாலை அமைத்து தரக்கோரி மக்கள் போராட்டம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : திருவாடானை தாலுகா அரசத்துாரில் கிராம இணைப்பு சாலை அமைத்துத் தரக்கோரி அப்பகுதிமக்கள், பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் செய்தனர்.அரசத்துார் கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள கல்லறை, ஊரணிகள், விளைநிலங்களுக்கு செல்லும், பிரதான இணைப்பு சாலை அகலமின்றி விபத்தை ஏற்படும் வகையில் குறுகலாகஉள்ளது. இதனால்
 சாலை அமைத்து தரக்கோரி மக்கள் போராட்டம்

ராமநாதபுரம் : திருவாடானை தாலுகா அரசத்துாரில் கிராம இணைப்பு சாலை அமைத்துத் தரக்கோரி அப்பகுதிமக்கள், பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் செய்தனர்.அரசத்துார் கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள கல்லறை, ஊரணிகள்,

விளைநிலங்களுக்கு செல்லும், பிரதான இணைப்பு சாலை அகலமின்றி விபத்தை ஏற்படும் வகையில் குறுகலாகஉள்ளது. இதனால் பள்ளிமாணவர்கள், முதியவர்கள், பெண்கள் சகதியில் நடந்து கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.சாலை அருகேயுள்ள பட்டாநிலத்தை கையகப்படுத்தி விரிவுப்படுத்தியும், தார்சாலை தரம் உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தி அரசத்துார் கிராம மக்கள், பள்ளிக்குழந்தைகளுடன் தர்ணா செய்தனர். இவர்களுடன் டி.ஆர்.ஓ., காமாட்சி கணேசன், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., சேக்மன்சூர், தாசில்தார் ரவிச்சந்திரன் பேசினர். அப்போது 6 மாதமாக மனுஅளித்தும் பதில் இல்லை, கலெக்டர் நேரடியாக வந்து உறுதிகூறவேண்டும் என கலைந்து செல்ல மறுத்து தர்ணா செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X