பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ தாவரங்கள் உலகின் சொத்து: பழங்குடியினருக்கான பயிலரங்கில் தகவல்

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஊட்டி:'மருத்துவ தாவரங்கள் உலக முழுவதும் தேவைப்படும் சொத்தாக உள்ளது,' என, பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது.ஊட்டியில், பழங்குடியின இளைஞர்களுக்கான மூலிகை மருத்துவ செடிகள் குறித்த ஒரு நாள் பயிலரங்கம் நேற்று நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, முதன்மை சித்த மருத்துவர் டாக்டர் சிவராமன் பேசியதாவது:நீலகிரியில், 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நல்ல

ஊட்டி:'மருத்துவ தாவரங்கள் உலக முழுவதும் தேவைப்படும் சொத்தாக உள்ளது,' என, பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது.ஊட்டியில், பழங்குடியின இளைஞர்களுக்கான மூலிகை மருத்துவ செடிகள் குறித்த ஒரு நாள் பயிலரங்கம் நேற்று நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, முதன்மை சித்த மருத்துவர் டாக்டர் சிவராமன் பேசியதாவது:நீலகிரியில், 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நல்ல உணவு, மருத்துவம், பண்பாடு உள்ளிட்ட நிறைய விஷயங்களை ஆண்டாண்டு காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். அதை சரியாக ஆவணப்படுத்தி, உலகத்திற்கு எடுத்து வருவதுடன், அவர்கள் பயனடையும் வகையில் நடவடிக்கை வேண்டும்.பழங்குடியின மக்களின் பல்வேறு உற்பத்தி பொருட்களுக்கு இடைத்தரகர் தலையீடின்றி சந்தைப்படுத்த பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மத்திய அரசு பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஒரு லட்சத்திற்கு மேலான சித்த மற்றும் 3 லட்சம் மூலிகைகள் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டு அரசு காப்புரிமை பெற்றுள்ளன. மருத்துவ தாவரங்கள் உலக முழுவதும் தேவைப்படும் சொத்தாக இருப்பதால், பழங்குடியினர் தாங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள மருத்துவ தாவரங்கள் என்ன என்பதை அறிந்து, மருத்துவ குணங்கள் குறித்து நன்றாக தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு, சிவராமன் பேசினார்.கலெக்டர் கீர்த்தி பிரிய தர்ஷினி(பொ), பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குனர் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X