கோயிலுக்கு திரும்புகிறது குன்றத்து யானை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோயிலுக்கு திரும்புகிறது குன்றத்து யானை

Added : நவ 23, 2021
Share
மதுரை : ருப்பரங்குன்றம் யானை தெய்வானை 15, மீண்டும் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு திரும்புகிறது.இக்கோயில் யானை தெய்வானை 2015ல் அசாமில் இருந்து வரவழைக்கப்பட்டது. கடந்தாண்டு பாகன் உதவியாளர் காளிதாசை தாக்கியதில் அவர் இறந்தார். இதை தொடர்ந்து யானை பராமரிப்பு முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டது. யானைகளுடன் தெய்வானை இருந்தால் நல்லது என மருத்துவர் குழு

மதுரை : ருப்பரங்குன்றம் யானை தெய்வானை 15, மீண்டும் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு திரும்புகிறது.

இக்கோயில் யானை தெய்வானை 2015ல் அசாமில் இருந்து வரவழைக்கப்பட்டது. கடந்தாண்டு பாகன் உதவியாளர் காளிதாசை தாக்கியதில் அவர் இறந்தார். இதை தொடர்ந்து யானை பராமரிப்பு முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டது. யானைகளுடன் தெய்வானை இருந்தால் நல்லது என மருத்துவர் குழு பரிந்துரைத்ததன் பேரில் மீனாட்சி

அம்மன் கோயில் யானை பார்வதியுடன் சேர்ந்து மீனாட்சி அம்மன் கோயிலில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோயில் திருவிழாக்களில் இரு யானைகளும் வலம் வருகின்றன. பாகன் சொல்வதை தெய்வானை கேட்பதால் விரைவில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு அனுப்ப மீனாட்சி கோயில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X