பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
கோவை விமான நிலையத்திற்கு காலை 11:15 மணிக்கு தனி விமானத்தில் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுங்ரா, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை விமான நிலையத்திலிருந்து சிட்ரா வரை 1.5 கி.மீ,,துாரத்திற்கு மக்கள் கூட்டமாக நின்று வரவேற்றனர். நகரின் பல பகுதியிலிருந்து தனியார் டவுன் பஸ்களில் மக்கள்
 முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

கோவை விமான நிலையத்திற்கு காலை 11:15 மணிக்கு தனி விமானத்தில் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுங்ரா, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை விமான நிலையத்திலிருந்து சிட்ரா வரை 1.5 கி.மீ,,துாரத்திற்கு மக்கள் கூட்டமாக நின்று வரவேற்றனர். நகரின் பல பகுதியிலிருந்து தனியார் டவுன் பஸ்களில் மக்கள் அழைத்து வரப்பட்டனர்தி.மு.க., பதிலடி முதல்வர் ஸ்டாலினின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டுவிட்டர் வலைதளத்தில் #GobackStalin என்னும் 'ஹேஷ்டேக்கை' எதிர்கட்சியினர் டிரெண்ட் செய்தனர். இது தி.மு.க.,வினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையில் 'முதல்வரை கோவை வரவேற்கிறது' என, தி.மு.க.,வினரின் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது.மக்களிடம் மனு பெற்றார் கோவை வந்த முதல்வர் ஸ்டாலினிடம், விமானநிலையம் முதல் வ.உ.சி., மைதானம் வரை நின்று பொதுமக்கள், தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர். ஒவ்வொரு சந்திப்பிலும் முதல்வர் நின்று, காரில் இருந்தபடி தொண்டர்கள், பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். குறிப்பாக அவிநாசி ரோடு, நவ இந்தியா சந்திப்பு அருகே பீளமேடு பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் கூடியிருந்தனர். இவர்கள் தங்கள் வேலையை நிரந்தரமாக்க வேண்டும் என முதல்வரிடம் மனு அளித்தனர்.முண்டியடித்த தொண்டர்கள்!முதல்வர் வந்த விமானத்தை பார்க்கும் ஆசையில் விமானநிலைய பகுதியில் பிருந்தாவன் நகர் அருகே விமானநிலைய வளாகத்தை ஒட்டி தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தி.மு.க., தொண்டர்கள், பஸ்களின் மேலே ஏறி நின்று, முண்டியடித்து கொண்டு விமானத்தை பார்வையிட்டனர்.பொதுமக்கள் அவதி பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனியார் பஸ்களில் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். இந்த பஸ்கள் பெரும்பாலும் சிட்ரா, நேருநகர், காளப்பட்டி ரோட்டில் நிறுத்தப்பட்டன. இதனால், அந்த பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இங்குள்ள கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் சிரமப்பட்டனர்.அ.தி.மு.க., வழியில் தி.மு.க.,கடந்த ஆட்சியில் முதல்வர் பங்கேற்கும் அரசு விழாக்களுக்கு பணம் கொடுத்து அண்டை மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் அழைத்து வரப்படுவர். அதே போல், தி.மு.க., வினரும், கோவையில் நடந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்து பஸ், வேன்களில் ஆட்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். திருப்பூரில் நடந்தநிகழ்ச்சிக்கும், இவர்கள் பஸ்களில் அழைத்து செல்லப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X