பொது செய்தி

தமிழ்நாடு

குளங்களை காக்கும் கோவை: அரசின் உதவிக்கரம் தேவை!

Added : நவ 23, 2021
Share
Advertisement
குளங்களை மேம்படுத்த 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ரூ.500 கோடி, நொய்யலை புனரமைக்க ரூ.230 கோடி என கோவையிலுள்ள நீர் நிலைகளை மீட்டெடுக்கும் பெயரில் கோடிகள் கொட்டப்படுகின்றன. கடந்த ஆட்சியின்போது துவக்கப்பட்ட இந்த வேலைகள் எதுவும், கோவை மக்களாலும், இங்குள்ள சூழல் அமைப்புகளாலும், விவசாயிகளாலும் கொண்டாடப்படவில்லை.இந்த நீர்நிலைகளில் இவர்கள் எதிர்பார்த்த திட்டங்கள் வேறு;

குளங்களை மேம்படுத்த 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ரூ.500 கோடி, நொய்யலை புனரமைக்க ரூ.230 கோடி என கோவையிலுள்ள நீர் நிலைகளை மீட்டெடுக்கும் பெயரில் கோடிகள் கொட்டப்படுகின்றன. கடந்த ஆட்சியின்போது துவக்கப்பட்ட இந்த வேலைகள் எதுவும், கோவை மக்களாலும், இங்குள்ள சூழல் அமைப்புகளாலும், விவசாயிகளாலும் கொண்டாடப்படவில்லை.இந்த நீர்நிலைகளில் இவர்கள் எதிர்பார்த்த திட்டங்கள் வேறு; நடக்கும் பணிகள் வேறு. நொய்யல் குளங்கள், அதன் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளங்களை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி, அவற்றில் கழிவுநீரைக் கலக்காத வகையில் சுத்திகரித்து...அவற்றோடு அந்த குளங்களை பொழுதுபோக்கிடமாக்க வேண்டுமென்பதே எல்லோரது எதிர்பார்ப்பு.கழிவுநீர் சுத்திகரிப்புக்கு 'நோ'ஆனால் இத்தனை கோடிகளைக் கொட்டியும், கழிவுநீர் கலக்காமல் தடுக்கவோ, கழிவுநீரைச் சுத்திகரிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.நீர் நிற்கும் பரப்பை அதிகப்படுத்தாமல், கான்கிரீட் கட்டுமானங்களை உருவாக்கி, ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக குளங்களில் நீர் நிற்கும் பரப்பை குறைத்து வருகின்றனர். இதுவே சூழல் அமைப்புகளை கொதிப்படைய வைத்துள்ளது.ஆக்கிரமிப்பு அகற்றவும் 'நோ'நொய்யல் உற்பத்தியாகும் இடத்திலிருந்து, மாவட்ட எல்லையைக் கடக்கும் வரை, நொய்யல் ஆற்றின் ஓரங்களிலும், ஓடைகளிலும் எக்கச்சக்கமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை மீட்டெடுக்க ஒரு முயற்சியும் இல்லை.மாறாக குளங்களில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மட்டும் அகற்றப்பட்டு, மீட்கப்பட்ட இடங்களில் ரோடு, கான்கிரீட் தளம் என்று அரசே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் இந்தப் பணிகள் நடந்தாலும், இதை யாருமே தட்டிக் கேட்கவில்லை. மாநில அரசு இது பற்றி விசாரணை கமிஷன் அமைக்கும் என்று சொன்ன பின், சி.பி.ஐ.,விசாரணை நடத்தப்படுமென்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதில் நடந்துள்ள ஊழலை விசாரிப்பதோடு, கோவையில் நொய்யல் வழித்தடங்களிலும், குளங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றி, அதன்பின் பணிகளைத் தொடர முதல்வர் உத்தரவிட வேண்டுமென்பதே, கோவை மக்களின் ஒருமித்த கோரிக்கையாகவுள்ளது -நமது நிருபர்-.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X