அரசியல் செய்தி

தமிழ்நாடு

'என்னடா... கட்சி வளர்க்குறீங்க நீங்க' :பஸ் ஸ்டாப்பில் கொதித்த உடன்பிறப்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் நேற்று நடந்த அரசு விழாவில் பங்கேற்க வந்திருந்த, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, விமான நிலையம் முதல் வ.உ.சி., மைதானம் வரை தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்நிகழ்வுக்கு வந்திருந்தவர்களில் ஒருவரான, மதுக்கரையை சேர்ந்த கிளை துணை செயலாளர் நடராஜ் என்பவரை, கட்சியினர், மைதானம் அருகிலேயே பரிதவிக்க விட்டு விட்டுச் சென்று விட்டனர்.உப்பிலிபாளையம் ஸ்டாப்
 'என்னடா... கட்சி வளர்க்குறீங்க நீங்க' :பஸ் ஸ்டாப்பில் கொதித்த உடன்பிறப்பு

கோவை:கோவையில் நேற்று நடந்த அரசு விழாவில் பங்கேற்க வந்திருந்த, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, விமான நிலையம் முதல் வ.உ.சி., மைதானம் வரை தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்நிகழ்வுக்கு வந்திருந்தவர்களில் ஒருவரான, மதுக்கரையை சேர்ந்த கிளை துணை செயலாளர் நடராஜ் என்பவரை, கட்சியினர், மைதானம் அருகிலேயே பரிதவிக்க விட்டு விட்டுச் சென்று விட்டனர்.உப்பிலிபாளையம் ஸ்டாப் அருகே பஸ்சுக்காக காத்திருந்த அவர், நிர்வாகிகளை மொபைல் போனில் அழைத்து, கடுமையாக திட்டிக் கொண்டிருந்தார்.அப்போது, அவர் திட்டும்போது, 'என்னடா, கட்சி வளர்க்குறீங்க. உங்களுக்கு தேவைன்னா கூட்டிட்டு வருவீங்க. முடிஞ்சுப் போச்சுன்னா, கழட்டி விட்டுட்டு போயிடுவீங்க. உங்களுக்கு அரசியல்ல ஊறுகாயா, நாங்க?என்னத்துக்கு என்னை விட்டுட்டு போனீங்க. உக்கடத்துக்கு வர்றது இருக்கட்டும். எந்த வழியில் வர்றதுன்னு எனக்குத் தெரியலை. பாத்ரூம் பக்கத்துல நிக்கிறேன்னு போனில் சொன்னேன்ல. அப்புறம் வந்திருக்கணும்ல.அப்புறம் வண்டியை எடுத்துட்டு போனா என்ன அர்த்தம். உங்களுக்குத் தேவைன்னா கூப்பிடுவீங்க. தேவை முடிஞ்சா, கழற்றி விட்டுட்டுப் போயிடுவீங்க. ஒங்க சவுகரியத்துக்கு வண்டியை எடுத்துட்டு போனா, என்ன அர்த்தம்? எவனோ, எக்கேடு கெட்டு, நாசமா போகட்டும்னு விட்டுருவீங்க. மதியம், 3:00 மணியானா, என்ன? கூட்டிட்டு போக வேண்டியதுதானே' என, திட்டித்தீர்த்தார்.நடராஜிடம் பேசியபோது, ''1990ல் இருந்து கட்சியில் இருக்கிறேன். செக்யூரிட்டி ஆபீசராக பணிபுரிகிறேன். எனது முதல் ஓட்டே, உதயசூரியனுக்குதான் போட்டேன். முதல்வரை வரவேற்க அழைத்து வந்தனர். ஒரே பஸ்சில், 50 பேர் வந்தோம். நிகழ்ச்சி முடிந்ததும் விட்டு விட்டுச் சென்று விட்டனர்,'' என, ஆதங்கத்துடன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X