தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை

Added : ஆக 06, 2011
Share
Advertisement

அன்னூர் : எல்லப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அடையாள அட்டை மற்றும் நோட்டு வழங்கும் விழா நடந்தது.எல்லப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 228 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் மாணவ, மாணவியர்க்கு அடையாள அட்டை மற்றும் இலவச நோட்டு வழங்கும் விழா நேற்று முன் தினம் நடந்தது. ஊராட்சி தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். நண்பர்கள் நற்பணி மன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பத்ம பாலாஜி, தி சென்னை சில்க்ஸ், ஸ்காட்ஸ் இன்ஜினியரிங், மற்றும் நன்கொடையாளர்கள் சுப்பிரமணியம், சீனிவாசன் ஆகியோர் சார்பில் அடையாள அட்டை மற்றும் இலவச நோட்டுக்கள் வழங்கப்பட்டது. முன்னதாக அறிவியல் கண்காட்சி நடந்தது. மாணவர்கள் தாங்களே உருவாக்கிய அறிவியல் பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தனர். மாணவர்கள், பெற்றோர் கண்காட்சியை பார்வையிட்டனர். தலைமை ஆசிரியை பவளக்கொடி மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X