போலீஸ் மீட்பு வாகனத்தால் உயிர் தப்பிய 2 பேர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் மீட்பு வாகனத்தால் உயிர் தப்பிய 2 பேர்

Added : நவ 23, 2021
Share
மதுரை : மதுரை கீழவாசலில் காய்ந்த அரசமரம் முறிந்து போலீஸ் மீட்பு வாகனத்தில் விழுந்ததால் 2 பேர் உயிர் தப்பினர்.கீழவாசல் போலீஸ் பீட் அருகே அரசமரம் காய்ந்த நிலையில் இருந்தது. காய்ந்த கிளைகள் அவ்வவ்போது ரோட்டில் விழுந்தபடி இருந்தது. பாதசாரிகள், டூ வீலர்களில் செல்வோருக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் மரக்கிளைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினருக்கு போலீஸ் தரப்பில்

மதுரை : மதுரை கீழவாசலில் காய்ந்த அரசமரம் முறிந்து போலீஸ் மீட்பு வாகனத்தில் விழுந்ததால் 2 பேர் உயிர் தப்பினர்.

கீழவாசல் போலீஸ் பீட் அருகே அரசமரம் காய்ந்த நிலையில் இருந்தது. காய்ந்த கிளைகள் அவ்வவ்போது ரோட்டில் விழுந்தபடி இருந்தது. பாதசாரிகள், டூ வீலர்களில் செல்வோருக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் மரக்கிளைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினருக்கு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடவடிக்கை இல்லை.

நேற்றிரவு 8:00 மணிக்கு மரத்தின் ஒரு பகுதி முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மரத்தில் கீழ் நிறுத்த பட்ட போலீஸ் மீட்பு வாகனம் மீது கிளைகள் விழுந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் அவ்வழியாக சென்ற மணி உள்ளிட்ட 2 பேர் சிறுகாயங்களுடன் உயிர்தப்பினர். இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் போக்குவரத்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் மரக்கிளைகளை அகற்றி போக்கு வரத்தை சீர்செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X