தகராறில் 5 பேர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தகராறில் 5 பேர் மீது வழக்கு

Added : நவ 23, 2021
Share
ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரத்தைச் சேர்ந்த விடுதலை சேகரன்,தொண்டியில் இருந்து உப்பூர் வழியாக ராமநாதபுரத்திற்கு காரில் சென்ற நிலையில், உப்பூர் பஸ் ஸ்டாப் பகுதியில், அவர் சென்ற காரின் மீது சிலர் கற்களை வீசினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் கொடுத்த புகாரின்

ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரத்தைச் சேர்ந்த விடுதலை சேகரன்,தொண்டியில் இருந்து உப்பூர் வழியாக ராமநாதபுரத்திற்கு காரில் சென்ற நிலையில், உப்பூர் பஸ் ஸ்டாப் பகுதியில், அவர் சென்ற காரின் மீது சிலர் கற்களை வீசினர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில், பொது இடத்தில் பிரச்னை செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த, ராமநாதபுரம் விடுதலைசேகரன், கற்களத்தூர் பாலமுருகன்,ஆரோக்கியம், சுப்பிரமணி, ஆனந்த், ஆகிய 5 பேர் மீது திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X