பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021
Share
Advertisement
சென்னை : வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் இன்று மதுரை, ராமநாதபுரம், உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடற்பகுதியில் (3.1 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாகஇன்று(நவ.,23) மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி,


சென்னை : வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் இன்று மதுரை, ராமநாதபுரம், உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.




latest tamil news


தென்கிழக்கு வங்க கடற்பகுதியில் (3.1 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக

இன்று(நவ.,23) மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



latest tamil news


சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X