நத்தத்தில் நடந்தது | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நத்தத்தில் நடந்தது

Added : நவ 23, 2021
Share
நத்தம் : நத்தம் சையது சாகுல் ஹமீது தர்ஹா சார்பில் உலக நன்மை வேண்டி சந்தன உரூஸ் விழா நடந்தது.விழாவிற்காக நாகூரிலிருந்து புனித சந்தனம் குடத்தில் கொண்டு வரப்பட்டது. தர்ஹாவில் இருந்து சலங்கை ஒலிக்க, டாக்டர் நசீர் அகமது சையது மீரான் தலையில் சந்தன குடத்தை சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் சந்தன குடத் தெரு, பெரியகடைவீதி, மஸ்தான் பள்ளிவாசல் வழியாக சென்று மீண்டும்

நத்தம் : நத்தம் சையது சாகுல் ஹமீது தர்ஹா சார்பில் உலக நன்மை வேண்டி சந்தன உரூஸ் விழா நடந்தது.விழாவிற்காக நாகூரிலிருந்து புனித சந்தனம் குடத்தில் கொண்டு வரப்பட்டது.

தர்ஹாவில் இருந்து சலங்கை ஒலிக்க, டாக்டர் நசீர் அகமது சையது மீரான் தலையில் சந்தன குடத்தை சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் சந்தன குடத் தெரு, பெரியகடைவீதி, மஸ்தான் பள்ளிவாசல் வழியாக சென்று மீண்டும் தர்காவை அடைந்தது. அங்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், உலக நன்மை வேண்டி பிரார்த்தனையும் நடந்தது.

தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், அ.தி.மு.க., சார்பில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், அவைத் தலைவர் சேக் ஒலி, வேம்பார்பட்டி அரசுப்பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் கண்ணுமுகமது உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் முகமது சாலியா,முகம்மது ஜூல்பிகர், பொறியாளர்கள் முகமதுசாலியா, முகமது மீரான், ஜல்வத்தி உள்பட தர்ஹா நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X