பொது செய்தி

தமிழ்நாடு

குடகனாறு அணையில் தண்ணீர் திறப்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
வேடசந்தூர் : குடகனாறு அணை நிரம்பி வருவதால் பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.வேடசந்தூர் அழகா புரியில் குடகனாற்றின் குறுக்கே 27 அடி உயரமுள்ள அணை உள்ளது. இங்கிருந்து 2 கிளை வாய்க்கால்கள் மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் 9 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. தற்போது அணையில் 22.5 அடி தண்ணீர் உள்ளது.அணைக்கு வினாடிக்கு 87 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின்
 குடகனாறு அணையில் தண்ணீர் திறப்பு

வேடசந்தூர் : குடகனாறு அணை நிரம்பி வருவதால் பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.வேடசந்தூர் அழகா புரியில் குடகனாற்றின் குறுக்கே 27 அடி உயரமுள்ள அணை உள்ளது.

இங்கிருந்து 2 கிளை வாய்க்கால்கள் மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் 9 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. தற்போது அணையில் 22.5 அடி தண்ணீர் உள்ளது.அணைக்கு வினாடிக்கு 87 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் கிழக்கு கால்வாயில் வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் எஸ்.காந்திராஜன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஷட்டரை திறந்து தண்ணீரை வெளியேற்றினர்.அனைத்து பகுதியிலும் மழைஅமைச்சர் பெரியசாமி கூறியதாவது: வறட்சியான இப்பகுதியில் விவசாயம் செழிக்க வேண்டும். குடிநீர் பிரச்னை இன்றி மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக தி.மு.க., ஆட்சியில் இந்த குடகனாறு அணை கட்டப்பட்டது.

தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் 100 சதவீத மழை பெய்துள்ளதால் அணைகள் நிரம்பி வழிகின்றன. நதிநீர் இணைப்பு உள்பட பலதிட்டங்களை நிறைவேற்ற இது நல்ல ஆரம்பம்'' என்றார்.கலெக்டர் விசாகன், உதவி கலெக்டர் தினேஷ்குமார், செயற்பொறியாளர் கோபி, பொறியாளர் முருகன், தி.மு.க., நிர்வாகிகள் கவிதா, வீரா.சாமிநாதன், சுப்பையன், சீனிவாசன், ஜீவா, ரவிசங்கர், கார்த்திகேயன், சுப்பிரமணி, முத்துக்கிருஷ்ணன், மாரியப்பன், மாசி, மருதபிள்ளை, பூலோகம், செல்வம், கருப்புச்சாமி, தமிழ்ச்செல்வி, ராமச்சந்திரன், மாரிமுத்து, பெருமாள், சுப்பையன், கருப்பன், கணேசன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X