பொது செய்தி

தமிழ்நாடு

நெருக்கடியில் ஸ்ரீவி ., பஸ் ஸ்டாண்ட் ; அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் அல்லாடும் மக்கள்

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டிற்கு எளிதில் பஸ்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கும் நிலையில் , புதிய பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்பஸ்டாண்ட் ஏற்படுத்தும்போது அப்போதைய பஸ்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 16 பஸ்கள் மட்டுமே நிற்கும் வகையில் கட்டப்பட்டது.1964ல் முதல்வராக இருந்த


ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டிற்கு எளிதில் பஸ்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கும் நிலையில் , புதிய பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பஸ்டாண்ட் ஏற்படுத்தும்போது அப்போதைய பஸ்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 16 பஸ்கள் மட்டுமே நிற்கும் வகையில் கட்டப்பட்டது.1964ல் முதல்வராக இருந்த காமராஜரால் திறக்கப்பட்ட பஸ்ஸ்டாண்டில், தற்போது தினமும் 200க்கு மேற்பட்ட பஸ்கள் வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது.பஸ் ஸ்டாண்டிற்குள் எளிதில் வந்து செல்ல முடியாததால் வெளியூர் பஸ்கள், சர்ச் சந்திப்பில் பயணிகளை இறக்கிவிட்டு பைபாஸ் ரோட்டில் செல்கிறது.பஸ் ஸ்டாண்டை சுற்றிய அனைத்து ரோடுகளின் இருபுறமும் தலா 5 அடி அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நடைபாதையை ஆக்கிரமித்து நகராட்சி நிர்வாகமே சைக்கிள் ஸ்டாண்ட் அமைத்துள்ளது.

இதனால் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் கூட எளிதில் வந்து செல்ல முடியவில்லை.பைபாஸ் ரோடு வருவதற்கு முன்பு மெயின் ரோடாக இருந்த சின்னக்கடை பஜார் வழியாக பஸ் போக்குவரத்து இருந்த நிலையில், தற்போது டூவீலர் கூட சிரமமின்றி செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு அதிகரித்து உள்ளது. பஸ் ஸ்டாண்டிற்குள் கடைகளால் பயணிகள் நிற்கும் இடமும் ஆக்கிரமிப்பில் உள்ளன. சிவகாசி பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகள் நிற்பதற்கு கூட இடமில்லை.நகரின் மையப்பகுதியில் பஸ் ஸ்டாண்டை சுற்றி அரசு மருத்துவமனை, காய்கறி மார்க்கெட், தனியார் மருத்துவமனை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி இருப்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இதனால் நோயாளிகள், மாணவர்கள், முதியவர்கள் பாதிக்கின்றனர். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X