பொது செய்தி

தமிழ்நாடு

சிவன்கோயிலில் கார்த்திகை

Added : நவ 23, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதே போல் மேற்கு ரதவீதி சிவலிங்கேஸ்வரர், ரயிலடி சித்தி
 சிவன்கோயிலில் கார்த்திகை

திண்டுக்கல் : கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதே போல் மேற்கு ரதவீதி சிவலிங்கேஸ்வரர், ரயிலடி சித்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு நகர் செல்வ கணபதி, நேருஜி நகர் நவசக்தி விநாயகர் கோயிலில் சோமவார சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் மூலவர் கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மனுக்கு பால், பழம் உட்பட 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன. முன்னதாக கோவில் வளாகத்தில் 108 சங்குகளில் தாமரையில் சிவன் இருப்பது போல் அலங்கரிக்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு மேல் 1008 சங்குகள் மற்றும் மலர்களைக் கொண்டு சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டு, யாகம் வளர்த்து பூஜைகள் செய்யப்பட்டது.

கன்னிவாடி: கன்னிவாடி அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் மெய்கண்ட சித்தர் குகை அருகே சோமலிங்க சுவாமி கோயிலில் உலகநன்மைக்காக ஆண்டுதோறும் கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம் நடைபெறும். நேற்று முதல் சோமவார சங்காபிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்க சுவாமிக்கு திரவிய அபிேஷகம் நடந்தது. சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், சங்காபிஷேக பூஜை துவங்கியது.

108 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் வேதி தீர்த்தம் நிரப்பி, மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. மூலவர், நந்திக்கு சங்காபிஷேகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X