சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

Added : நவ 23, 2021
Share
Advertisement
விருதுநகர் : பயிர் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மூன்று குழந்தைகளுடன் தீக்குளிப்பு முயற்சி செய்த, சாத்துார் ராவுத்தன்பட்டியை சேர்ந்த பொன்மாரியப்பன் மனைவி ராஜலெட்சுமியை போலீசார் மீட்டனர்.விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர் கூட்டம் நடந்த போதுராஜலெட்சுமி மூன்று பெண் குழந்தைகளுடன் அங்கு

விருதுநகர் : பயிர் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மூன்று குழந்தைகளுடன் தீக்குளிப்பு முயற்சி செய்த, சாத்துார் ராவுத்தன்பட்டியை சேர்ந்த பொன்மாரியப்பன் மனைவி ராஜலெட்சுமியை போலீசார் மீட்டனர்.

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர் கூட்டம் நடந்த போதுராஜலெட்சுமி மூன்று பெண் குழந்தைகளுடன் அங்கு வந்தார். அப்போது ராஜலெட்சுமி தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீப்பெட்டியை பற்ற வைக்க முயற்சித்தார். அங்கிருந்த போலீசார் மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து மீட்டனர். இதில் குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய் சிதறியது.ராஜலெட்சுமி கூறியதாவது: ராவுத்தன்பட்டியை சேர்ந்த ஜெயபால், சுப்புராஜ் இருவரும் கிராவல் அள்ளியது தொடர்பாக போலீசார் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்தனர். இதற்கு நாங்கள் தான் காரணம் என நினைத்து பழிவாங்கும் நடவடிக்கையாக 3 ஏக்கரில் பயிரிட்டிருந்த பருத்தி, மக்காச்சோள பயிர்களில் களைக்கொல்லி மருந்தை தெரித்து பயிர் கொலை செய்துள்ளனர். என் கணவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். போலீசில் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யவில்லை. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X