நகர்ப்புற வாக்காளர் பட்டியல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகர்ப்புற வாக்காளர் பட்டியல்

Added : நவ 23, 2021
Share
திண்டுக்கல் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை 100 பிரதிகள் அச்சிட்டு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல் நகராட்சிகள், 23 பேரூராட்சிகளுக்கு விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி கடந்த 10 நாட்களாக ஓட்டுப்பதிவு


திண்டுக்கல் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை 100 பிரதிகள் அச்சிட்டு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல் நகராட்சிகள், 23 பேரூராட்சிகளுக்கு விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி கடந்த 10 நாட்களாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்களை சரிபார்க்கும் பணி மும்முரமாக நடந்தது.இதற்கிடையில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்குதல், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இளைஞர்கள் ஆர்வமுடன் பட்டியலில் இணைய விண்ணப்பித்து வருகின்றனர்.இந்நிலையில் தேர்தல் நடக்க உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் அந்த வார்டுக்கான வாக்காளர் பட்டியலை தலா 100 பிரதிகள் அச்சிட்டு தயார் நிலையில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவற்றை பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்களுக்கு விற்பனை செய்ய, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு இலவசமாக, தேர்தல் அதிகாரிகளுக்கு, ஆவண பதிவு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்காக பிரித்து வழங்கப்பட உள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், ''வாக்காளர் பட்டியலை அச்சிட்டு தயார் நிலையில் வைக்க உத்தரவு வந்துள்ளது. இன்னும் அச்சிடும் பணி துவங்கவில்லை'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X