பொது செய்தி

தமிழ்நாடு

கார்த்திகை பட்டத்தில்

Added : நவ 23, 2021
Share
Advertisement
கன்னிவாடி : பனிப்பொழிவை எதிர்நோக்கி ஆத்துார், ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களில், கார்த்திகை பட்ட சுண்டல் சாகுபடி துவங்கியுள்ளது.தருமத்துப்பட்டி, கன்னிவாடி, செம்பட்டி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. மழையை நம்பி, காரமடை, கசவனம்பட்டி, கோனுார், வண்ணம்பட்டி, வீரக்கல், எஸ்.பாறைப்பட்டி, சுரக்காபட்டி கிராமங்களில் பலர் சோளம், மக்காச்சோளம், பயறு

கன்னிவாடி : பனிப்பொழிவை எதிர்நோக்கி ஆத்துார், ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களில், கார்த்திகை பட்ட சுண்டல் சாகுபடி துவங்கியுள்ளது.தருமத்துப்பட்டி, கன்னிவாடி, செம்பட்டி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. மழையை நம்பி, காரமடை, கசவனம்பட்டி, கோனுார், வண்ணம்பட்டி, வீரக்கல், எஸ்.பாறைப்பட்டி, சுரக்காபட்டி கிராமங்களில் பலர் சோளம், மக்காச்சோளம், பயறு சாகுபடியில் ஈடுபட்டனர்..

படைப்புழு, அதிக வெயில், எடை குறைவு, விலையில்லாதது போன்ற பிரச்னைகள் 4 ஆண்டுகளாக தொடர்கிறது. சில நாட்களாக இரவு நேர பனிப்பொழிவு துவங்கியுள்ளது. இதையடுத்து கரிசல்பட்டி, சின்னப்பபுரம், கந்தசாமிபுரம், வட்டப்பாறை, மேட்டுப் பட்டி, கூத்தம்பட்டி பகுதிகளில், கொத்தமல்லி, சுண்டல் சாகுபடியை துவக்கியுள்ளனர்.விவசாயி பழனிச்சாமி கூறுகையில், ''பனிப்பொழிவை எதிர்நோக்கி, கார்த்திகை பட்ட சாகுபடியை துவக்கினோம். கடந்தாண்டு சுண்டல் விலை கிடைக்காமல் மூடை 5 ஆயிரத்திற்கு விற்றது. இந்தாண்டு விளைச்சலும், விலையும் கணிசமாக கைகொடுக்கும் என நம்புகிறோம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X