பொது செய்தி

தமிழ்நாடு

ஒட்டன்சத்திரத்தில் மறுகால்; விவசாயிகள் மகிழ்ச்சி

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம் நிரம்பி மறுகால் சென்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்ஒட்டன்சத்திரம் தாலுகாவில் உள்ள குளங்களில் மிகப்பெரியது சடையன்குளம். 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் பரப்பலாறு அணையிலிருந்து உபரி நீர் சடையன் குளத்திற்கு திறந்து விடப்பட்டது.இத்துடன் தொடர்ந்து பெய்த கன
 ஒட்டன்சத்திரத்தில் மறுகால்;  விவசாயிகள் மகிழ்ச்சி

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம் நிரம்பி மறுகால் சென்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

ஒட்டன்சத்திரம் தாலுகாவில் உள்ள குளங்களில் மிகப்பெரியது சடையன்குளம். 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் பரப்பலாறு அணையிலிருந்து உபரி நீர் சடையன் குளத்திற்கு திறந்து விடப்பட்டது.இத்துடன் தொடர்ந்து பெய்த கன மழையால் காட்டாற்று வெள்ளமும் சென்றதால் குளம் வேகமாக நிரம்பியது.

வழக்கமாக ஜனவரி மாதம்தான் இந்த குளம் நிரம்பி மறுகால் செல்லும். ஆனால் இந்த ஆண்டு பெய்த கனமழையால் இந்தாண்டு நவம்பரிலேயே நிரம்பி மறுகால் சென்றது. குளத்தின் உபரிநீர் செங்குளத்திற்கு செல்கிறது. அந்த குளமும் சில நாட்களில் நிரம்பி விடும் என பொதுப்பணி துறையினர் தெரிவித்தனர்.குளம் நிரம்பி உள்ளதால் சுற்று வட்டார பகுதியில் நூற்றுக்கணக்கான நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்துள்ளதால், பல ஊராட்சிகளின் குடிநீர் தேவையும் பூர்த்தி அடையும். குளம் நிரம்பியதால் ஆக்கிரமிப்பு அகற்றிய தன்னார்வ அமைப்புகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X