பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர் கூட்டத்தில் உதவிகள் வழங்கல்

Added : நவ 23, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.2016 சட்டசபை தேர்தல் பணியின் போது மரணம் அடைந்த முன்னாள் படைவீரர் சீனிவாசன் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூ.10 லட்சம், தாட்கோ மூலம் 26 தொழில் முனைவோர்களுக்கு ரூ.25 லட்சத்து 88 ஆயிரத்து 521 கடன் உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் விபத்தில் காயமடைந்த இருவருக்கு நவீன செயற்கை கைகளை கலெக்டர்

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.2016 சட்டசபை தேர்தல் பணியின் போது மரணம் அடைந்த முன்னாள் படைவீரர் சீனிவாசன் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூ.10 லட்சம், தாட்கோ மூலம் 26 தொழில்

முனைவோர்களுக்கு ரூ.25 லட்சத்து 88 ஆயிரத்து 521 கடன் உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் விபத்தில் காயமடைந்த இருவருக்கு நவீன செயற்கை கைகளை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.2020-21 கல்வியாண்டில் நடந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாமில் பங்கேற்ற 415 மாணவர்களுக்கான ரூ.23 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வரப்பெற்றுள்ள நிலையில், 22 மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.டி.ஆர்.ஒ., மங்களராமசுப்பிரமணியன், நேர்முக உதவியாளர் காளிமுத்து, துணை கலெக்டர் கிருஷ்ணவேணி, சி.இ.ஓ., ஞானகவுரி, குடும்ப நல துணை இயக்குனர் கவுசல்யாதேவி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X