கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்'; உயர் நீதிமன்றம்

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : 'மாணவர்களின் நலனுக்காக, பாதுகாப்புக்காக, ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. சென்னையைச் சேர்ந்த, 'அறம்' அறக்கட்டளையின் தலைவர் உமர் பரூக் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழக அரசு 2021 ஆகஸ்ட் 21ல் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, அரசு துறைகள் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கல்வி நிறுவனங்களில்


சென்னை : 'மாணவர்களின் நலனுக்காக, பாதுகாப்புக்காக, ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.latest tamil newsசென்னையைச் சேர்ந்த, 'அறம்' அறக்கட்டளையின் தலைவர் உமர் பரூக் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழக அரசு 2021 ஆகஸ்ட் 21ல் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, அரசு துறைகள் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள், தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தி இருக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தடுப்பூசி செலுத்தும்படி நிர்ப்பந்திக்கின்றனர். தடுப்பூசி செலுத்தினால், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவோம் என, அரசால் கூட எந்த உத்தரவாதமும் அளிக்க முடியவில்லை.தடுப்பூசி செலுத்திக் கொள்வதும், தவிர்த்துக் கொள்வதும் மக்களின் விருப்பம் என்று விட்டு விட வேண்டும்.


latest tamil newsகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பலர், பாரம்பரிய மருந்துகளால் குணமடைந்துள்ளனர். எனவே, தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. இது குறித்து அரசுக்கு, கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:பள்ளிக்கு வர வேண்டும் என்றால், ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மாணவர்களின் நலன், பாதுகாப்பு கருதப்பட வேண்டும். சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த விருப்பப்படாத ஆசிரியர்கள், மற்றவர்களின் நலன் கருதி வீட்டில் இருப்பது சிறந்தது.

தடுப்பூசியை இலவசமாக செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழப்புகள் ஏராளம். உலக சுகாதார அமைப்பு, இரண்டு தடுப்பூசிகளையும் அங்கீகரித்து உள்ளது. இந்த அமைப்பு, நிபுணர்களை கொண்டது; குறைத்து மதிப்பிட முடியாது.மருத்துவ ஆராய்ச்சியில், புதிது புதிதாக கண்டுபிடிப்புகள் வருகின்றன.

தடுப்பூசிகளுக்கு மாற்று, நாளை கூட வரலாம். பணிகள் தொடர்பான வழக்கு, பொது நல வழக்காக வராது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல. இதை ஏற்க முடியாது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.வழக்கை வாபஸ் பெற அனுமதிப்பதாகவும் முதல் பெஞ்ச் தெரிவித்தது. இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறியதை தொடர்ந்து, தள்ளுபடி செய்து முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veera - Chennai,இந்தியா
23-நவ-202112:29:08 IST Report Abuse
Veera இது ஒரு வகையில் தடுப்பூசியை கட்டாயப்படுத்தும் செயல். கொரோனாவால் குழந்தைகளுக்கு பாதிப்பில்லை என்பது அனைவரும் அறிந்ததே. குழந்தைகளை காரணம் காட்டி தடுப்பூசி இங்கு கட்டாயப்படுத்தப்படுகிறது. மேகாலயா உயர்நீதிமன்றம் தடுப்பூசியை கட்டாயப்படுத்துவது தனி மனித உரிமை மீறல் என்று கூறியுள்ளது. அதே நிலைப்பாட்டை நம் உயர் நீதி மன்றமும் எடுத்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
23-நவ-202114:44:38 IST Report Abuse
ஆரூர் ரங்எனக்கு தெரிந்தே இரண்டு குழந்தைகள் COVID-19 ஆல் இறந்துள்ளன.😪 நோயை நோயாலும் கிருமியை கிருமியால் அழிக்கும் ஹோமியோபதி தத்துவத்தின் அடிப்படையில் உருவானவை தான் எல்லா தடுப்பூசிகளும். தன்னுடைய முட்டாள்தனமான நம்பிக்கைக்காக தடுப்பூசி போடாமல் அடுத்தவர்களுக்கு நோய் பரப்புபவர்கள் சமூக விரோதிகளே...
Rate this:
Veera - Chennai,இந்தியா
23-நவ-202123:06:52 IST Report Abuse
Veeraஉண்மையான அறிவியல் என்றால் இது செய்தால் இது நடக்கும் என்று துல்லியமாக இருக்க வேண்டும். 'வரும் ஆனா வராது' என்ற பாணியில் இருக்க கூடாது. தடுப்பூசி போடுவதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியாக ஏன் கூற முடியவில்லை? தடுப்பூசி செலுத்தினால் தொற்று ஏற்படாது என்று ஏன் கூறமுடியவில்லை? தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்று வருகிறது அவர்களும் சிலர் இறக்கிறார்கள். சரி, தடுப்பூசி செலுத்தி ஒரு வருடத்திற்கு முன்பாக விபத்து அல்லது தற்கொலை அல்லாத மரணம் ஏற்பட்டால் அரசோ அல்லது தடுப்பூசி நிறுவனமோ ஏன் இழப்பீடு தரக்கூடாது? எந்த ஒரு விஷயமும் அனைவருக்கும் பொருந்தும் என்று நினைப்பது எப்படி சரி? தடுப்பூசி தான் ஒரே தீர்வு என்று கூறுவது எவ்விதத்தில் சரி?...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
23-நவ-202110:06:04 IST Report Abuse
duruvasar இப்போதெல்லாம் அரசின் கடமைகளை நீதிமன்றங்கள் அறிவுறுத்த வேண்டியிருக்கிறது
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
23-நவ-202108:01:35 IST Report Abuse
GMM பணிகள் தொடர்பான வழக்கு பொது நல வழக்கு ஆகாது.- ஆசிரியர், ஊழியர், மாணவர் தடுப்பூசி அவசியம். நோய் பரவல் தடுப்பூசியினால் குறைந்துள்ளது. ஒரு தனிநபர் மற்றும் ஒரு வழக்கறிஞர் பொது நலத்தை தீர்மானிக்க கூடாது. புதிய தலைமை நீதிபதியின் சிறந்த தீர்ப்பு. அறக்கட்டளை பணி பொது நல வழக்கு பதிவு செய்வது அல்ல. அறக்கட்டளை வரி விலக்கு நீக்க வேண்டும். வழக்கறிஞர் பொது நல வழக்கு பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X