பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ள பாதிப்புக்கு தி.மு.க., அரசே காரணம்- பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டு

Added : நவ 23, 2021
Share
Advertisement
செஞ்சி-'சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு தி.மு.க., அரசே காரணம்' என, பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நடந்த பா.ஜ., மாவட்ட தலைவர் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது.செஞ்சி அடுத்த சிங்கவரத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் பாறைகளை வெடி வைத்து தகர்த்ததால், சுற்று சுவர் இடிந்து

செஞ்சி-'சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு தி.மு.க., அரசே காரணம்' என, பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நடந்த பா.ஜ., மாவட்ட தலைவர் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது.செஞ்சி அடுத்த சிங்கவரத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் பாறைகளை வெடி வைத்து தகர்த்ததால், சுற்று சுவர் இடிந்து விழுந்துள்ளது.பயிர் காப்பீட்டு திட்டத்தில் அதிகம் பயனடைந்தவர்கள் தமிழக விவசாயிகள் தான். நெல் பயிருக்கு காப்பீடு வேண்டாம் என, தமிழக அரசு கூறுவது தவறானது. மழை பாதிப்பு மழையால் ஏற்பட்டதில்லை. லஞ்சம், ஊழலால் ஏற்பட்டது. ஏரி, குளங்களை துார் வாராமல் பொய்யான கணக்கு காட்டியதால் நடந்துள்ளது. 2015ம் ஆண்டு மழையைவிட தற்போது சென்னையில் மழை குறைவு.சென்னை வெள்ள பாதிப்புக்கு தி.மு.க., அரசே காரணம். மழைக்கு முன்பே தமிழக அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. வெள்ள நிவாரணமாக நகரங்களில் ரூ. 5 ஆயிரம், கிராமங்களில் பயிர் இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி தொடரும். தமிழகத்தில் கூட்டணிக்கு அ.தி.மு.க., தான் தலைமையேற்கும்.இவ்வாறு அவர், தெரிவித்தார்.மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொதுச் செயலாளர் பாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் எம்.எஸ். ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், நகர தலைவர் ராமு உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X