பொது செய்தி

தமிழ்நாடு

மரக்காணம் ஒன்றிய சேர்மன் மறைமுக தேர்தல்

Added : நவ 23, 2021
Share
Advertisement
மரக்காணம்-மரக்காணம் ஒன்றிய சேர்மன் மறைமுக தேர்தலில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தக்கோரி தி.மு.க., கவுன்சிலரின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்தில் 26 கவுன்சிலர்களில் தி.மு.க., 17, அ.தி.மு.க., 3, பா.ம.க., 2, வி.சி., 1, சுயேட்சை 3 பேர் வெற்றி பெற்றனர்.மரக்காணம் தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் கண்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் ஆகியோர்

மரக்காணம்-மரக்காணம் ஒன்றிய சேர்மன் மறைமுக தேர்தலில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தக்கோரி தி.மு.க., கவுன்சிலரின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்தில் 26 கவுன்சிலர்களில் தி.மு.க., 17, அ.தி.மு.க., 3, பா.ம.க., 2, வி.சி., 1, சுயேட்சை 3 பேர் வெற்றி பெற்றனர்.மரக்காணம் தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் கண்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் ஆகியோர் சேர்மன் பதவிக்கு கடந்த மாதம் 22ம் தேதி போட்டியிட்டனர். போதிய கவுன்சிலர்கள் ஓட்டுப்போட வரவில்லை என தேர்தல் அதிகாரிகள் தேர்தலை ஒத்தி வைத்தனர்.கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கண்ணன், தேர்தலில் போட்டியிட்டதாக கட்சி மேலிடம் அவரை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கியது. கண்ணன் மனு தாக்கல் செய்ததை அடுத்து சேர்மன் தேர்தல் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டது.அதன்படி சேர்மன் தேர்தல் நேற்று நடந்தது. எஸ்.பி., ஸ்ரீநாதா மேற்பார்வையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 10:00 மணிக்கு மரக்காணம் ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடந்தது.தேர்தலில் 26 கவுன்சிலர்களும் பங்கேற்றனர். கண்ணன் ஆதரவாளரான விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் அர்ஜூனன், தயாளன் ஆகியோர் சேர்மன் பதவிக்கு போட்டியிடுவதாக தெரிவித்தனர்.பின் தேர்தல் அதிகாரி சரவணன் மறைமுக தேர்தலை நடத்தினார்.இதில், தயாளன் 14 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், அர்ஜூனன் 12 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.இ.சி.ஆரில் மறியல்இதற்கு அர்ஜூனன் எதிர்ப்பு தெரிவித்து, 'நான் தான் 14 ஓட்டுகள் பெற்றேன். என்னைத்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.மேலும், புதுச்சேரி - சென்னை இ.சி.ஆரில் மதியம் 1:30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் 30 நிமிடத்தில் மறியல் கைவிடப்பட்டது. தேர்தல் அதிகாரிகளிடம் மறு எண்ணிக்கைக்கு மீண்டும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் ஒப்புதல் கொடுக்காததால் மீண்டும் 2:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரித்ததைத் தொடர்ந்து, ஐகோர்ட்டில் வழக்குப்பதிந்து நீதியை பெறுகின்றோம் எனக் கூறி மறியலை கைவிட்டனர்.பின், பிற்பகல் 3:00 மணிக்கு துணை சேர்மன் பதவிக்கான தேர்தல் நடத்துவதாக அதிகாரிகள் அறிவித்தனர். அதற்கு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பழனி போட்டியிடுவதாக மனு கொடுத்தார். போட்டியில்லாததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.கணவரிடம் பெண் கவுன்சிலர் வாக்குவாதம்ஓட்டுப்போட வந்த கவுன்சிலர் கஸ்துாரியை, அவரது கணவர் சந்திரசேகர், போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், தனியாக அழைத்து வந்து, தயாளனுக்கு ஓட்டு போடும்படி 'கேன்வாஸ்' செய்தார். அதற்கு, கஸ்துாரி, 'ஒருவருக்கு துரோகம் செய்வது தவறு. நான் அர்ஜூனனுக்குத்தான் ஓட்டு போடுவேன்' என கூறி விட்டு ஓட்டு போட சென்றார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X