பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் இல்லம் தேடி கல்வி நகராட்சி பள்ளியில்

Added : நவ 23, 2021
Share
Advertisement
பழநி : பழநி கல்வி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்த பழநி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி நடந்தது.கொரோனாவால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கவும், பள்ளி இடைநிற்றலை தடுக்கவும் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்த உள்ளது. அதற்கான தன்னார்வலர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளி

பழநி : பழநி கல்வி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்த பழநி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி நடந்தது.கொரோனாவால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கவும், பள்ளி இடைநிற்றலை தடுக்கவும் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்த உள்ளது.

அதற்கான தன்னார்வலர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளி மேலாண்மை குழு சார்பில் பயிற்சிகள் நடக்கிறது.குறிப்பாக பாட்டு, நடனம், நாடகம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். பழநி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சில நாட்களாக நடந்த பயிற்சி வகுப்பில் நாட்டுப்புறப் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் பலர் பங்கேற்றனர்.சில நாட்களில் தன்னார்வலர்கள் மூலம் அருகேயுள்ள பகுதிகளில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பயிற்சி ஏற்பாடுகளை தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியம், திட்ட ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X