பொது செய்தி

தமிழ்நாடு

போடி மெட்டு ரோட்டில் மண்சரிவு

Added : நவ 23, 2021
Share
Advertisement
போடி : போடிமெட்டு ரோட்டில் நேற்று இரவு மண்சரிவு காரணமாக பல இடங்களில் பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்துள்ளன. போடி - மூணாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திலிருந்து மூணாறு செல்ல போடி- முந்தல் ரோட்டிலிருந்து 22 கி.மீ., துாரத்தில் 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 644 அடி உயரத்தில் போடி மெட்டு மலைச்சாலை உள்ளது. ஏற்கனவே 18 அடி அகல ரோடாக

போடி : போடிமெட்டு ரோட்டில் நேற்று இரவு மண்சரிவு காரணமாக பல இடங்களில் பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்துள்ளன. போடி - மூணாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து மூணாறு செல்ல போடி- முந்தல் ரோட்டிலிருந்து 22 கி.மீ., துாரத்தில் 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 644 அடி உயரத்தில் போடி மெட்டு மலைச்சாலை உள்ளது. ஏற்கனவே 18 அடி அகல ரோடாக இருந்தது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் 24 அடியாக அகலப்படுத்தப்பட்டது.தொடர் மழை காரணமாக நேற்று இரவு 7:00 மணிக்கு போடி மெட்டு ரோடு 9 வது கொண்டை ஊசி வளைவு, புலியூத்து பகுதியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன. தகவல் அறிந்த குரங்கணி போலீசார் வாகன போக்குவரத்தை நிறுத்தினர். இரவிலேயே தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மண் அள்ளும் இயந்திரம் மூலம் பாறை, மண்சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X