பொது செய்தி

தமிழ்நாடு

வடிகால் வசதியின்றி தேங்கும் கழிவுநீர்; பற்றாக்குறை குடிநீரால் மக்கள் சிரமம்; கதிர்நரசிங்கபுரம் ஊராட்சி அவலம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் கதிர்நரசிங்கபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். கதிர்நரசிங்கபுரம் ஊராட்சியில் 2500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இங்கு முறைப்படுத்தப்படாத தெருக்கள், சந்துகளில் குடியிருப்புகள் அமைந்துள்ளதால் வடிகால் வசதி, சிமென்ட் ரோடு வசதி இல்லை. குடிநீர், தெருவிளக்கு, கழிப்பறை வசதிக்கு மக்கள் தொடர்ந்து


ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் கதிர்நரசிங்கபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். கதிர்நரசிங்கபுரம் ஊராட்சியில் 2500க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இங்கு முறைப்படுத்தப்படாத தெருக்கள், சந்துகளில் குடியிருப்புகள் அமைந்துள்ளதால் வடிகால் வசதி, சிமென்ட் ரோடு வசதி இல்லை. குடிநீர், தெருவிளக்கு, கழிப்பறை வசதிக்கு மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நிறைவேற்ற வில்லை.ஊராட்சியில் நிலவும் பிரச்னைகள் குறித்து மக்கள் கூறியதாவது:வடிகால் வசதி இல்லைவி.சஞ்சீவி, கதிர்நரசிங்கபுரம்: மழைநீரை கடத்துவதற்கு பல இடங்களில் வடிகால் வசதி இல்லை. குருசாமி நாடார் தெருவில்

இருபுறமும் வடிகால் வசதி இல்லை. தற்போது தெருவில் கழிவுநீருடன் மழைநீரும் தேங்குகிறது. இதனால் சாக்கடை புழுக்கள், கொசுத்தொல்லை அதிகரித்து நோய் தாக்கம் ஏற்படுகிறது. இந்த அவலம் 20 ஆண்டு களாக தொடர்கிறது. மெயின் ரோட்டில் இருந்து தெரு தாழ்வாக உள்ளதால் வடிகால் அமைக்க முடிய வில்லை. அதிகாரிகள் பிரச்னையை ஆய்வு செய்தும் தீர்வு ஏற்பட வில்லை.குடிநீர் பற்றாக்குறைஎஸ்.சிவஞானம், கதிர்நரசிங்கபுரம்: பாலக்கோம்பை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வாரம் ஒரு முறை வினியோகம் செய்யப்படும் நீர் போதுமானதாக இல்லை. மக்கள் போர்வெல் நீரை அதிகம் பயன்படுத்துகின்றனர். தெருவிளக்குகளும் சரியாக எரிவதில்லை. ஊராட்சி விரிவாக்கத்திற்கு ஏற்ற வசதி இல்லை. அன்றாடம் அவதிப்படுகின்றனர். 6வது வார்டு ரைஸ்மில் தெருவில் பழுதடைந்துள்ள மின்கம்பத்தை விபத்திற்கு முன் மாற்ற வேண்டும்.குப்பை கிடங்காகும் ஓடைஆர்.எம்.மலைச்சாமி, கதிர்நரசிங்கபுரம்: ஊராட்சி யில் ஆண், பெண்களுக்கு கழிப்பறை

வசதி இல்லை. ஏற்கனவே உள்ள பெண்கள் கழிப்பறை பராமரிப்பின்றி உள்ளது. ஊருகாலப்பன் கோயில், ராக்காச்சியம்மன் கோயில் வளாகத்தில் இரவில் மது அருந்தி சுகாதார கேடு ஏற்படுத்துகின்றனர். இதை தடுக்க இரவில் போலீசார் கண்காணிப்பு அவசியம். நீர் வரத்து சிற்றோடையை குப்பை கிடங்காக மாறி வருகிறது. குப்பை கிடங்கிற்கு இடம் ஒதுக்க வேண்டும். ஊருகாலப்பன் குளத்தில் மழைநீர் தேங்கினால் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். மழை நீரை

குளத்தில் தேக்குவதற்கான திட்டம் தேவை.அடிப்படை வசதி மேம்படும்கா.முருகலட்சுமி, ஊராட்சி தலைவர்: சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக பொறுப்பேற்றுள்ளேன். ஊராட்சியில் நிதி நிலை இல்லை. அரசு மூலம் கிடைக்கும் நிதியும் குறைவாக உள்ளது. ஊராட்சியில் மக்கள் எனக்கு ஓட்டுப்போட்டு நம்பிக்கையுடன் தேர்வு செய்துள்ளனர். ஊராட்சி யில் பொது மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுப்பேன். அடிப்படை தேவைகள், பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் எப்போதும் ஊராட்சியில் தெரிவிக்கலாம்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X