சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தில் 4 நாட்களாக சிக்கி தவித்த மூதாட்டி மீட்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுாரில் பக்கவாதம் கராணமாக வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், வெள்ளத்தில் சிக்கித் தவித்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் படகு மூலமாக பத்திரமாக மீட்டனர். கடலுார் பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பெரியகங்கணாங்குப்பம், நாணமேடு, கோண்டூர், திடீர்குப்பம் உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. வெள்ளத்தால் பாதித்த மக்களை தீயணைப்புத்

கடலுார்-கடலுாரில் பக்கவாதம் கராணமாக வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், வெள்ளத்தில் சிக்கித் தவித்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் படகு மூலமாக பத்திரமாக மீட்டனர். கடலுார் பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பெரியகங்கணாங்குப்பம், நாணமேடு, கோண்டூர், திடீர்குப்பம் உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. வெள்ளத்தால் பாதித்த மக்களை தீயணைப்புத் துறையினர் படகு மூலமாக மீட்டு முகாமில் தங்க வைத்தனர்.நேற்று 4ம் நாளாக தண்ணீர் வடியவில்லை. கடலுார், குண்டு சாலை சூர்யா நகரில் பக்கவாதம் பாதித்த 60 வயது மூதாட்டி வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தார். தகவலறிந்த கடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் வீரர்கள் நேற்று சென்று, மூதாட்டியை படகு மூலமாக மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X