சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகர் சூர்யா மீது பா.ம.க., புகார்

Added : நவ 23, 2021
Share
Advertisement
திண்டிவனம்-நடிகர் சூர்யா உட்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டிவனம் போலீசில் பா.ம.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சூர்யா நடித்துள்ள 'ஜெய் பீம்' திரைப்படம் குறித்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் டவுன் போலீசில் பா.ம.க., சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சட்ட பாதுகாப்புக்குழு மாநில செயலாளர் பாலாஜி தலைமையில் நிர்வாகிகள், அளித்துள்ள புகார் மனு

திண்டிவனம்-நடிகர் சூர்யா உட்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டிவனம் போலீசில் பா.ம.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சூர்யா நடித்துள்ள 'ஜெய் பீம்' திரைப்படம் குறித்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் டவுன் போலீசில் பா.ம.க., சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சட்ட பாதுகாப்புக்குழு மாநில செயலாளர் பாலாஜி தலைமையில் நிர்வாகிகள், அளித்துள்ள புகார் மனு விபரம்:'ஜெய் பீம்' திரைப்படத்தில் வன்னியர் சங்கத் தலைவர் குருமூர்த்தி பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். அதோடு, அக்னி குண்டத்தை காட்சிப்படுத்தி, வன்னியர்களை இருளர் சமூகத்திற்கு எதிரான வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான படத்தின் இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர், நடிகர் சூர்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சின்னசேலம்சின்னசேலம் போலீஸ் நிலையத்தில், பா.ம.க., நகர வன்னியர் சங்கத் தலைவர் பாஸ்கரன் தலைமையில், பா.ம.க., நிர்வாகிகள், நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா மற்றும் திரைப்பட இயக்குனர் ஞானவேல் மீது புகார் மனு அளித்தனர். பின், நடிகர் சூர்யாவின் உருவ பொம்மையை எரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X