பொன்முடி வழக்கு இன்றும் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொன்முடி வழக்கு இன்றும் விசாரணை

Added : நவ 23, 2021
Share
விழுப்புரம்-அமைச்சர் பொன்முடி மீதான, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2006ம் ஆண்டு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிந்தனர்.இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து

விழுப்புரம்-அமைச்சர் பொன்முடி மீதான, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2006ம் ஆண்டு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிந்தனர்.இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்றுநடந்த வழக்கு விசாரணையில், அமைச்சர் பொன்முடி, விசாலாட்சி ஆஜராகவில்லை.வழக்கில் நேரில் ஆஜராவதற்கு விலக்கு கேட்டு அமைச்சர் பொன்முடி தரப்பில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவிற்கு எதிராக அரசு தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இம்மனு மீது இருதரப்பு வாதங்களை தெரிவிக்க வழக்கு விசாரணையை இன்றைக்கு, ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X