பொது செய்தி

தமிழ்நாடு

நெருக்கடி; நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தியில்

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி, : நுால், மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஜவுளி தொழில் நெருக்கடியில் உள்ளது.இதனால் 10 ஆயிரம் நெசவாளர்கள் வாழ்வதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விசைத்தறி தொழிலை நம்பி உள்ளனர். 2500 விசைத்தறிகளில் 40,60,80 நம்பர் நுால்களில் வெள்ளை வேஷ்டி, காவி, கருப்பு கலர் வேஷ்டி, புட்டா, பிளைன், கட்டம், கோர்வை, பேடு ரக


ஆண்டிபட்டி, : நுால், மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஜவுளி தொழில் நெருக்கடியில் உள்ளது.இதனால் 10 ஆயிரம் நெசவாளர்கள் வாழ்வதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விசைத்தறி தொழிலை நம்பி உள்ளனர். 2500 விசைத்தறிகளில் 40,60,80 நம்பர் நுால்களில் வெள்ளை வேஷ்டி, காவி, கருப்பு கலர் வேஷ்டி, புட்டா, பிளைன், கட்டம், கோர்வை, பேடு ரக சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் சேலைகள் பல மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. கொரோனா, ஜவுளிச்சந்தையில் நிலவும் போட்டியால் ஜவுளி உற்பத்தியாளர்கள்

கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். மூன்று மாதங்களாக நுால்விலை, மூலப்பொருட்கள் விலை உயர்வு தொழிலை தொடர முடியாத நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளது.நுால் விலை உயர்வு:ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: மூன்று மாதத்தில் 40ம் நம்பர் நுால் (4.5 கிலோ கட்டு) ரூ.200 வரையும், 60ம் நம்பர் ரூ.350 வரையும், 80-ம் நம்பர் ரூ. 450 வரை விலை உயர்ந்துள்ளது. சாயம் ஏற்றுதல் இதர செலவினங்கள் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

சபரிமலை, தைப்பூசம், தைப்பொங்கல் சீசன் ஜவுளி உற்பத்திக்கு திட்டமிட வேண்டும். ம விலை உயர்வுக்கு ஏற்ப உற்பத்தியான வேட்டி, சேலைகளை உயர்த்தி விற்க முடியவில்லை. சிறு விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் நுால் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டணத்தில் சலுகை தரவேண்டும்.வாழ்வாதாரம் பாதிப்பு:விசைத்தறி தொழிலாளர்கள் கூறியதாவது: உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள

நெருக்கடியால் நெசவாளர்களுக்கு கூலி குறைகிறது. இரு ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்கப்படுவதில்லை. நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. இங்கு ஆண்டுக்கு பல கோடி மதிப்பிலான ஜவுளிகள் உற்பத்தியாகிறது. ஜவுளி உற்பத்தி, நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X