பொது செய்தி

தமிழ்நாடு

திருமணத்திற்கு மறுத்த காதலனுடன் 'டும் டும்'

Added : நவ 23, 2021
Share
Advertisement
விருத்தாசலம்,-திருமணத்திற்கு மறுத்த காதலனை போலீசார் முன்னிலையில் காதலி கரம் பிடித்தார். திட்டக்குடி அடுத்த பெரங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லமுத்து மகள் பூங்குழலி, 24; பி.காம்., பட்டதாரி. இவர், அதே பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் கலைச்செல்வன், 29, என்பவரை ஓராண்டாக காதலித்தார். பூங்குழலியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி உள்ளார்.கலைச்செல்வனுக்கு வேறு இடத்தில்

விருத்தாசலம்,-திருமணத்திற்கு மறுத்த காதலனை போலீசார் முன்னிலையில் காதலி கரம் பிடித்தார். திட்டக்குடி அடுத்த பெரங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லமுத்து மகள் பூங்குழலி, 24; பி.காம்., பட்டதாரி. இவர், அதே பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் கலைச்செல்வன், 29, என்பவரை ஓராண்டாக காதலித்தார். பூங்குழலியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி உள்ளார்.கலைச்செல்வனுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது. பூங்குழலி திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். கலைச்செல்வன் மறுத்ததால் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரணையில், கலைச்செல்வன், பூங்குழலியை ஏமாற்றியது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து, மகளிர் காவல் நிலையம் எதிரே, எம்.ஜி.ஆர்.,நகரில் உள்ள வண்ண முத்துமாரியம்மன் கோவிலில், நேற்று இரவு 9:00 மணியளவில், போலீசார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X