பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஆஸ்திரேலியா

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021
Share
Advertisement
சிட்னி : கொரோனா காரணமாக அமலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை ஆஸ்திரேலிய அரசு தளர்த்திஉள்ளது. இதன்படி, டிச.,1 முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஆஸி.,க்குச் செல்லலாம்.பரிசோதனைஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அனைவரும் டிச., 1 முதல் ஆஸ்திரேலியாவிற்கு வர அனுமதிக்கப்படுவர். இதன்படி வெளிநாட்டு
Australia, Allow, Entry, Fully Vaccinated, Visa Holders, December 1

சிட்னி : கொரோனா காரணமாக அமலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை ஆஸ்திரேலிய அரசு தளர்த்திஉள்ளது. இதன்படி, டிச.,1 முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஆஸி.,க்குச் செல்லலாம்.


பரிசோதனை


ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அனைவரும் டிச., 1 முதல் ஆஸ்திரேலியாவிற்கு வர அனுமதிக்கப்படுவர். இதன்படி வெளிநாட்டு மாணவர்கள், திறன் வல்லுனர்கள் உள்ளிட்ட தகுதியுள்ள 'விசா' வைத்து உள்ளோர் அனைவரும் பயண விலக்கு கோரி விண்ணப்பிக்காமல் நேரடியாக ஆஸ்திரேலியா வரலாம்.


latest tamil news


அவர்கள் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து பாதிப்பில்லை என்ற சான்று வைத்திருக்க வேண்டும். ஆஸ்திரேலியா வந்து இறங்கியதும் அந்தந்த மாகாணங்களில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.


தனிமைப்படுத்துதல்


ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆஸி., விசா வைத்துள்ளோர் பயண விலக்கு கோராமல், தனிமைப்படுத்துதல் இன்றி வர அனுமதிக்கப்படுவர். இது தொடர்பாக கூடுதல் மாற்றங்கள் பின் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X