பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் தனித்து போட்டி பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு

Added : நவ 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'புதுச்சேரி மாநிலத்தில் இனி வரும் தேர்தலில் பா.ம.க., தனித்து நிற்கும். ஆதரவு கொடுப்பவர்களை வைத்து ஆட்சி அமைப்போம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்த புதுச்சேரி பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் பா.ம.க., ஆட்சிக்கு வர வேண்டும் என

புதுச்சேரி-'புதுச்சேரி மாநிலத்தில் இனி வரும் தேர்தலில் பா.ம.க., தனித்து நிற்கும். ஆதரவு கொடுப்பவர்களை வைத்து ஆட்சி அமைப்போம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்த புதுச்சேரி பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் பா.ம.க., ஆட்சிக்கு வர வேண்டும் என நானே நேரடியாக மக்களிடம் சென்று ஆதரவு திரட்டினேன். புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என நான் செல்லாத இடம் இல்லை.ஆனால் இன்றைக்கு அதனை வேறு ஒருவர் அறுவடை செய்துவிட்டார். அவர்களை நான் குறை சொல்லவில்லை. பா.ம.க., தனியாக நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லையே என வருத்தம் உள்ளது.எத்தனையோ வகையான சுகம் உள்ளது. அதில் பதவி சுகம் ஒன்று. அந்த பதவி சுகம் எனக்குத் தெரியாது. புதுச்சேரியில் முதன்முதலாக பா.ம.க., சார்பில் ராம்சிங் என்பவரை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுத்து அனுப்பினோம். அதன் பிறகும் பலரை அனுப்பினோம். ஆனால் நமக்கு துரோகம் செய்தனர். தப்பு தாளங்கள் போட்டவர்கள் சிலர் கட்சியை விட்டு ஓடினர். அவர்களை பற்றி கவலை இல்லை. பதர்கள் தான் கட்சியை விட்டு விலகின. விசுவாசமான நெல்மணிகள் இன்னும் கட்சியில் தான் உள்ளனர்.விசுவசமான கட்சி நிர்வாகிகள் பலர், 'புதுச்சேரியை அப்படியே விட்டுவீட்டீர்கள்' என தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடிக்கடி கேட்பர்.கூட்டணியில் இருந்தாலும் நளினமாக தி.மு.க.,வை விமர்சனம் செய்வேன். அதற்கேற்ப மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியும், 'தைலாபுரம் தோட்டத்தில் இருந்து தைலம் வந்துள்ளது' என்று பதில் சொல்வார்.அப்படிப்பட்ட தைலத்தை புதுச்சேரிக்கும் அனுப்பினேன். ஆனால் மக்களிடம் கொடுக்காமல் நிர்வாகிகளே தைலத்தை தேய்த்துக் கொண்டு, சரியாக பணி செய்யாமல் துாங்கிவிட்டனர். அந்த தவறை தற்போது உணர்ந்து விட்டனர்.புதுச்சேரியில் கட்சியை வளர்க்க அவ்வளவு கஷ்டப்பட்டேன். புதுச்சேரியில் என்னை கொலை செய்ய முயற்சித்தார்கள். ஆனால் நான் தப்பித்தேன்.பா.ம.க., புத்துயிர் பெற்று புதுச்சேரியில் 4 தொகுதிகளிலும் காரைக்காலில் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றிபெற்றால் நாம் தான் முதல்வர். கூட்டு, பொரியல் (அமைச்சர் உள்ளிட்ட பதவிகள்) மற்றவர்களுக்கு கொடுத்து விடலாம்புதுச்சேரி மாநிலத்தில் இனி வரும் தேர்தலில் பா.ம.க., தனித்து நிற்கும். ஆதரவு கொடுப்பவர்களை வைத்து ஆட்சி அமைப்போம். திண்ணை பிரசாரம், சமூக வளைதளம் மூலம் பெண்கள், இளைஞர்களிடம் கட்சியின் கொள்கைகளை கொண்டு செல்லுங்கள். அவர்களை அதிக அளவில் கட்சியில் இணைய செய்யுங்கள்.இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X