இந்தியா

67 லட்சம் கனஅடி நீர் வீணாக கடலில் கலப்பு: 8,575 ஏக்கர் விவசாயம் பாதிக்கும் அபாயம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-நுாற்றாண்டு பழமையான செல்லிப்பட்டு படுகை அணையை அரசு முறையாக பராமரிக்காததால் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, 67 லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இதனால், ஓரிரு மாதங்களில் தடுப்பணை வறண்டு, சுற்று வட்டாரத்தில் விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் காப்பு காட்டில் உருவாகும் சங்கராபரணி ஆற்றில் வரும் நீர் வீடூர்
67 லட்சம் கனஅடி நீர் வீணாக கடலில் கலப்பு: 8,575 ஏக்கர் விவசாயம் பாதிக்கும் அபாயம்

புதுச்சேரி-நுாற்றாண்டு பழமையான செல்லிப்பட்டு படுகை அணையை அரசு முறையாக பராமரிக்காததால் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, 67 லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.

இதனால், ஓரிரு மாதங்களில் தடுப்பணை வறண்டு, சுற்று வட்டாரத்தில் விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் காப்பு காட்டில் உருவாகும் சங்கராபரணி ஆற்றில் வரும் நீர் வீடூர் வழியாக புதுச்சேரி பகுதியில் நுழைகிறது.இங்கு கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, சுத்துக்கேணி, செல்லிப்பட்டு, உறுவையாறு, திருக்காஞ்சி வழியாக, நோணாங்குப்பத்தில் வங்கக் கடலில் கலக்கிறது.

பழமையானபடுகை அணைமழை காலத்தில் ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் ஒவ்வொரு ஆண்டும் கரையோர கிராமங்கள் பாதிப்பிற்கு உள்ளாகின.இதனை தடுக்கவும், மழை நீரை சேமித்து, நிலத்தடி நீர் வளத்தை பெருக்கும் வகையில், பிரெஞ்சு ஆட்சி காலத்தில், 1906ம் ஆண்டு சங்கராபரணி ஆற்றில், செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே படுகையணை கட்டப்பட்டது.335 மீட்டர் நீளம், 2 மீட்டர் உயரம், கொண்ட தடுப்பணையின் மேற்கு பகுதியில் 2 கி.மீ., துாரத்திற்கு மொத்தம் 6.70 லட்சம் கன மீட்டர் (ஒரு கன மீட்டர் என்பது, ஆயிரம் லிட்டர்) அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் இந்த படுகையணை கட்டப்பட்டது.இதன் மூலம் நேரடி விவசாய பாசனம் இல்லை என்றாலும், சுற்றியுள்ள சுமார் 8,575 ஏக்கர் விளை நிலங்கள் ஆழ்குழாய் மூலம் பாசன வசதி பெற்று வந்தன.படுகையணையின் கீழ் பகுதியில் மழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளும் பெருமளவு குறைந்தது.பராமரிப்பு இல்லைநுாற்றாண்டு கடந்த இந்த படுகையணையை பராமரிக்கும் பொதுப்பணித் துறை, போதிய நிதி ஆதாரம் இல்லாததால், சமீப காலமாக பெயரள வில் பணியை மேற்கொண்டு வந்தது.இதனால், கடந்த 2016ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், படுகை அணையின் கீழ் தளம் சேதமடைந்தது. அதன் பாதிப்பை உணர்ந்து, அரசு முழுமையாக சீரமைக்கவில்லை.மாறாக, ஒவ்வொரு ஆண்டும் மணல் மூட்டை அடுக்குவதும், மழையில் அது அடித்துச் செல்வதும் தொடர்கதையாக இருந்தது.இந்தாண்டு துவக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வந்ததால், தடுப்பணையில் தண்ணீர் தேங்கி இருந்தது.இந்நிலையில், கடந்த 26ம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, கடந்த 30ம் தேதி 12 செ.மீ., மழை கொட்டியது.கனமழையால் உடைந்ததுசங்கராபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால், வீடூர் அணையில் இருந்து கடந்த 7ம் தேதி வினாடிக்கு 503 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.இதனால், செல்லிப்பட்டு படுகை அணை கடந்த 8ம் தேதி காலை நிரம்பி வழியத் துவங்கியது. அப்போது, படுகை அணையின் நடுப்பகுதியின் கீழே ஏற்கனவே சேதமடைந்த பகுதியில் சிறிய அளவில் உடைப்பு ஏற்பட்டது.கடந்த 18ம் தேதி 18.8 செ.மீ., மழை கொட்டியதாலும், வீடூர் அணையில் இருந்து வினாடிக்கு 44 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதாலும் ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.படுகை அணைக்கு மேலாக 2 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், படுகை அணையில் ஏற்கனவே சேதமடைந்த பகுதி, 19ம் தேதி உடையத் துவங்கியது.அதில் படுகை அணையின் நடுப்பகுதியில் 80 மீட்டர் நீளத்திற்கு முழுமை யாக உடைந்தது.மேலும், தடுப்பணையில் ஆங்காங்கே சிறு சிறு பகுதிகளாக 60 மீட்டர் நீளம் என மொத்தம் 140 மீட்டர் துாரத்திற்கு உடைந்து, தண்ணீர் முழுமையாக, வீணாக வெளியேறி வருகிறது.இதனால், வீடூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவதை நிறுத்திய ஓரிரு வாரங்களில், செல்லிப்பட்டு படுகையணையில் தண்ணீர் முழுமையாக வற்றி, கட்டாந்தரையாக காட்சி அளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, தடுப்பணையை சுற்றியுள்ள 8,575 ஏக்கர் விளை நிலங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் செயலிழந்து, விவசாயம் பாதிக்கும் அபாயம் உருவாகி உள்ளது.விவசாயம் பொய்த்ததால் வறுமையில் வாடும் விவசாயிகள், அரசின் நலத்திட்டங்களை நம்பியே வாழ வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவார்கள்.ஏற்கனவே நிதி பற்றாக்குறையில் உள்ள அரசு, நலத் திட்டங்களுக்கு கூடுதல் செலவு செய்ய வேண்டி வரும். இந்த தொகையை படுகையணையை சீரமைக்க செலவு செய்தால், விவசாயமும், விவசாயிகளும் வளமடைய வாய்ப்பு உள்ளது.

அதனை உணர்ந்து, அரசு இனியேனும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழித்துக்கொள்ளுமா அரசுபடுகை அணை புரையோடிவிட்டதால், சீரமைத்தாலும் நிற்காது. அதனால், புதிய தடுப்பணை கட்ட திட்டம் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. நிதி எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை.அதுவரை, இப்பகுதியின் விவசாயத்தை காத்திட, முறையாக மணல் மூட்டைகளை அடுக்கி, எதிர் வரும் நாட்களில் பெய்யும் மழை நீரையாவது சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தவணை முறையில்பராமரிப்பு பணிபொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார பிரிவு, ஆண்டுதோறும் நீர் கட்டமைப்புகளை ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பராமரிக்க வேண்டும்.ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிதி பற்றாக்குறை காரணமாக, ஓராண்டு தடுப்பணை ஷட்டர்களையும், அடுத்த ஆண்டு வாய்க்கால்களையும், 3வது ஆண்டு தடுப்பணை கரைகளை சீரமைக்கின்றனர்.இதனால் எந்த வேலையும் முழுமையாக செய்ய முடியவில்லை. தனித்தனியாக செய்த பணியும், எந்தவித பிரயோஜனம் இன்றி போய்விடுகிறது.இனி வரும் காலத்திலாவது, ஒவ்வொரு நீர் நிலைகளையும் அதற்குரிய காலத்தில் சீரமைக்க அரசு முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X