சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்.. தமிழகம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
தொட்டியில் மூழ்கி மாணவி பலிதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த பள்ளிக்கொண்டாப்பட்டையைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி. அங்குள்ள பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தவர் மாயமானார். பெற்றோர் தேடியபோது வீட்டின் எதிரே உள்ள தண்ணீர் தொட்டி யில் மூழ்கி சடலமாக மிதந்தது தெரிந்தது. விபத்தில் உயிரிழந்த 2


தொட்டியில் மூழ்கி மாணவி பலி


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த பள்ளிக்கொண்டாப்பட்டையைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி. அங்குள்ள பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தவர் மாயமானார். பெற்றோர் தேடியபோது வீட்டின் எதிரே உள்ள தண்ணீர் தொட்டி யில் மூழ்கி சடலமாக மிதந்தது தெரிந்தது.


விபத்தில் உயிரிழந்த 2 பக்தர்கள்


பெரம்பலுார்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் மற்றும் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த ஆறு அய்யப்ப பக்தர்கள், டவேரா காரில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்று ஊர் திரும்பினர். திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், பெரம்பலுார் மாவட்டம், வி.களத்துார் பிரிவு ரோடு அருகே, நேற்று அதிகாலை 3:30 மணியளவில், சாலையோரம் உள்ள மைல் கல் மீது கார் மோதியது. இதில் ஆனந்த், 27; சூர்யா, 30, ஆகியோர் உயிரிழந்தனர்.


மின்னல் தாக்கி விவசாயி சாவு


பெரம்பலுார்: அரியலுார் மாவட்டம், கல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன், 50. விவசாயியான இவர், நேற்று மதியம், 3:15 மணியளவில், தன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. சாமிநாதன் மீது மின்னல் தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X