பொது செய்தி

தமிழ்நாடு

வாடகை இடத்தில் விதிமீறி கட்டிய கட்டடத்தை இடிக்க ஊராட்சி உத்தரவு

Added : நவ 23, 2021
Share
Advertisement
மூணாறு, : மூணாறில் மாவட்ட சுற்றுலாதுறை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்கிய இடத்தில் விதிமீறி கட்டிய ஓட்டலை இடிக்க ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.மூணாறில் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் பழைய மூணாறில் மாவட்ட சுற்றுலாதுறைக்குச் சொந்தமான இடத்தில்டீக்கடை,நவீன கழிப்பறைகள் கொண்ட 'டேக் ஏ பிரேக்' எனும் கட்டடம் அத்துறை சார்பில் ரூ.37 செலவில் 2016ல்

மூணாறு, : மூணாறில் மாவட்ட சுற்றுலாதுறை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்கிய இடத்தில் விதிமீறி கட்டிய ஓட்டலை இடிக்க ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.

மூணாறில் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் பழைய மூணாறில் மாவட்ட சுற்றுலாதுறைக்குச் சொந்தமான இடத்தில்டீக்கடை,நவீன கழிப்பறைகள் கொண்ட 'டேக் ஏ பிரேக்' எனும் கட்டடம் அத்துறை சார்பில் ரூ.37 செலவில் 2016ல் கட்டப்பட்டது.அதனை ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.25 ஆயிரம் வாடகைக்கு தனிநபருக்கு வழங்கப்பட்டது.

அவர் விதிமுறைகள் மீறி 'டேக் ஏ பிரேக்' கட்டத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து ஓட்டலுக்கு புதிய கட்டடம் கட்டி, அதனை ரூ.5 லட்சம் முன்பணம் பெற்று மாதம் ரூ.45 ஆயிரத்திற்கு வாடகைக்கு கொடுத்தார். அந்த ஓட்டல் கட்டடத்தை இடிக்குமாறு ஊராட்சி செயலர் அஜித்குமார் நோட்டீஸ் வழங்கினார். வாடகைக்கு எடுத்தவர் ஓட்டலைகாலி செய்ய முன்வந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X